நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 03

0 66

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)
அந்த மரம் ஊரில் மிகப்­ பி­ர­ப­ல­மான சமூக சேவை­யாளர் கோபால் அவர்­க­ளு­டை­யது. பசிக்கு ஒரு காய் பிடுங்­கினால் எதுவும் சொல்ல மாட்டார் என்ற விசு­வா­சத்தின் பேரிலேயே ஒரே­யொரு பலாக்­காயை பிடுங்கி வந்து, அதனை அவித்து சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்த போது தமிழ் படத்தில் வில்­லன்கள் வரு­வது போல் வந்த பொலிஸார், அவித்த பலாக் காயையும் ராம­னையும் அள்ளிக் கட்டிக் கொண்டு சென்­றனர். சட் என்று ரகுவை இடை­ம­றித்தார் சுரேஷ்.

இனி அதி­லி­ருந்து”

ரு­வரின் முறைப்­பாட்டின் பேரில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது பொலி­ஸாரின் கடமை. யுவர் ஹொனர் ! இந்த வழக்கில் இவ்­வ­ளவு பெரிய லோயர் ரகு வாதி­டு­வது தான் எனக்கு அதி­சயம் ” என்றார்.

“யுவர் ஹொனர் ! இதில் நான் வாதி­டு­வது தான் அதி­சயம் என்­கிறார் சுரேஷ். இதில் பெரிய அதி­சயம் ஒன்றும் இல்லை.” இந்தக் குற்­ற­வாளிக் கூண்டில் நிற்கும் மனி­தரின் குடும்­பத்தின் வறுமை நிலையில் தான் எங்­க­ளது சிறு­வ­யதில் எங்­க­ளது குடும்­பமும் இருந்­தது.

” எங்கள் தந்தை ஊரில் தோட்ட உரி­மை­யா­ள­ராக இருந்­தாலும் எங்கள் தந்தை விவ­சாயி. எங்கள் தாயின் மறை­வுக்குப் பின்னர் எங்­களை பரா­ம­ரிக்­கவும் படிக்க வைக்­க­வுமே தந்­தையின் பொழுது கழிந்­ததால் வறுமை எங்­க­ளிடம் குடி­கொண்­டது.

” அதனால் எங்­க­ளு­டைய நில­பு­லன்­களை விற்றே எங்­க­ளு­டைய காலம் கழிந்­தது. நாங்­களும் எது­வித தங்கு தடையும் இன்றி, கல்வி கற்றோம். வளர்ந்தோம். உயர் கல்வி கற்க வேண்­டிய பராயம் வந்த போது எங்­க­ளு­டைய வறு­மையைப் போக்க, தந்தை கல் உடைத்தார். மரம் ஏறினார்.

வயல்­களில் கூலி வேலை செய்தார். அன்­றாடத் தேவைக்­காக எது கிடைத்­ததோ அதனைச் செய்தார்.” இந்த ராமன் போன்ற பொது மக்­க­ளிடம் இருந்து அற­விடப் பட்ட வரிப் பணத்தால் இல­வச உயர் கல்­வியைக் கற்று, வக்­கீ­ல­்க­ளாக, டொக்­டர்­க­ளாக, இன்­ஜீ­னி­யர்­க­ளாக இன்னும் பல தரப்­பட்­ட­வர்க­ளாக சர்­வ­க­லா­சா­லை­க­ளி­லி­ருந்து வெளியே­றினோம்.”

” நாங்­களும் சர்­வ­க­லா­சாலை கல்­வியைத் தொடர்ந்து கற்று வக்­கீல்­க­ளாக வெளியே­றினோம்.
“கடு­மை­யான உழைப்பும் எங்­க­ளுக்கு ஒரு நேரம் வாய்க்கு ருசி­யாக வாரத்­துக்கு ஒரு முறை­யா­வது சாப்­பாடு அவரால் தர முடிய வில்­லையே என்ற ஆறாத கவ­லை­யுமே அவரை எங்­க­ளிடம் இருந்து நிரந்­த­ர­மாகப் பிரித்­தது.

” நாம் வக்­கீ­ல­க­ளாக இல­வசக் கல்வி கற்க எமக்கு இந்தக் குற்­ற­வாளிக் கூண்டில் நிற்கும் இந்த ராமன் போன்ற பொது மக்­க­ளிடம் இருந்து அர­சாங்கம் அற­விட்ட வரிப் பணமே உத­வி­யது

” இந்த ராமன் போன்ற பொது மக்­க­ளிடம் இருந்து அற­விடப்பட்ட வரிப் பணத்தால் இல­வச உயர் கல்­வியை கற்று, வக்­கீ­ல்­க­ளாக,
டொக்­டர்­க­ளாக, இன்­ஜீ­னி­யர்­க­ளாக இன்னும் பல தரப்­பட்­ட­வர்க­ளாக சர்­வ­க­லா­சா­லை­க­ளி­லி­ருந்து வெளியே­றினோம். ”

அதன் பின் அர­சாங்­கத்­திலும் தனியார் துறை­க­ளிலும் சுய­மா­கவும் தொழில் செய்து பெரும் பணமும் புகழும் சம்­பா­திக்கும் நாம,் என்­றா­வது பொது மக்­க­ளிடம் இருந்து எமது கல்­விக்கு உத­விய அந்த வரிப் பணத்தைப் பற்­றியோ அல்­லது அந்த மக்­க­ளையோ நினைத்துப் பார்த்­தோமா ?

அதுவும் அல்­லாது நாம் அவர்­க­ளுக்­காக, நாட்­டுக்­காக ஏதா­வது பிரதிபலன் எதிர்பார்க்­காமல் செய்­துள்­ளோமா ?
மனி­த­னுக்கு மனிதன் இரக்கம் காட்ட வேண்டும். அப்­ப­டி­யா­வது நாம் யாருக்­கா­வது இரக்­க­மா­வது காட்­டி­னோமா ?

டொக்­டர்கள் ஆனதும் தனி­யாக செனல் போட்டு காலையும் மாலையும் நோயா­ளர்கள் பெருக வேண்டும் என இறை­வனை வேண்டி ஈவி­ரக்­க­மற்று தங்­க­ளிடம் வரும் பொது மக்­க­ளான நோயா­ளர்­க­ளிடம் இருந்து பணத்தைக் கறக்­கிறோம்.

இப்­படிப்பட்ட மனி­தர்­க­ளி­ட­மி­ருந்து அற­விட்ட வரிப் பணத்­தி­லி­ருந்து தானே நாம் படித்து டொக்­டர்­க­ளா­கினோம் என்று நாம் யாரா­வது நினைத்துப் பார்த்­தோமா ? இல்லை அப்­படி வநத நோயா­ளி­க­ளுக்கு இரக்கம் காட்­டி­னோமா ?

வக்­கீல்­க­ளானோம் அநி­யாயம் இழைக்­கப்­பட்ட யாருக்­கா­வது இல­வ­ச­மாக ஆஜர் ஆனோமா. இப்­படி ஒரு வழக்கு இன்று இங்கு விசா­ர­ணைக்கு வருகி­றது என நேற்று பத்­தி­ரி­கையில் படித்தேன். அதனால் இந்த வறி­ய­வ­ருக்கு இல­வ­ச­மாக வாதாட வந்து விட்டேன்.

வந்த இடத்தில் தான் தம்­பி­யுடன் வாதிட வேண்­டிய விஷயம் தெரிய வந்­தது. ..ம்.. சரி ஒரு கை பார்ப்போம். என்று ராம­னுக்­காக இல­வ­ச­மாக ஆஜர் ஆகும் ரக­சி­யத்தை வெளியிட்­ட­வாறே ஆச­னத்தில் அமர்ந்தார்.

” எம்மைப் போன்ற பலரும் சிந்­திப்­பதற்­கான நல்ல புத்­தி ­ம­திகள். என்­றாலும் யுவர் ஹொனர் ! மனி­த­னுக்கு மனிதன் இரக்கம் காட்ட வேண்டும் என எதிரி தரப்பில் சொல்லப்பட்­டது கண்­டிப்­பாக அது நடந்தே ஆகனும். அதனால் தான் எல்லாம் வல்ல இறைவன் இத­யத்தை இரத்­தத்­தாலும் சதை­யாலும் படைத்­தி­ருக்­கிறான்.

ஆனாலும் மனிதன் சாப்­பி­டு­வதை மகிழ்ச்சியோடு சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான் இறைவன் இதயத்துக்குக் கீழே வயிற்றை வைத்திருக்கிறான். கருணையோடு ” எனது கட்சிக் காரருக்கு கருணை காட்டும் படி கருணையுடன் வேண்டிக் கொள்கிறேன். எதிரிக் கூண்டில் நிற்கும் ராமனைப் பார்த்து நீதிபதி கேட்டார்
                                                                                                                                                                                                           (தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!