நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் விளையாடியதால் பதற்றமடைந்தேன்- டேவிட் வேர்னர்

0 163

நீண்­ட­கால இடை­வெ­ளிக்குப் பின்னர் சர்­வ­தேச போட்­டியில் விளை­யா­டி­யதால் பதற்­ற­ம­டைந்தேன் என அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான டேவிட் வோர்னர் தெரி­வித்­­துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரான லீக் போட்­டியில் நடப்பு சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லியா 5 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

பந்தை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 12 மாதத் தடையை எதிர்­கொண்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் சர்­வ­தேச போட்­டியில் விளை­யா­டி­யது இதுவே முதல் தட­வை­யாகும்.

அப் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் 38.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 207 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா 34.5 ஓவர்­களில் 3 விக்­கெட்­களை இழந்து 209 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீ­ட­டி­யது.

டேவிட் வோர்னர் ஆட­ட­மி­ழக்­காமல் 89 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­நா­யகன் விரு­தையும் தன­தாக்­கிக்­கொண்டார்.

‘நீண்­டகால் இடை­வெ­ளிக்கு பின்னர் பயிற்சி முகா­முக்கு திரும்­பிய போதிலும், இப் போட்­டி­யின்­போது பதற்­றத்­துக்கு மத்­தியில் உணர்ச்­சி­ வ­சப்­பட்டேன்.

களத்தில் என்னை நிலை­நி­றுத்தி, இயல்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு கூடு­த­லான பந்­து­களை எதிர்­கொள்ள வேண்டி இருந்­தது.

மறு­மு­னையில் ஆரோன் பிஞ்ச் அதி­ர­டி­யாக ஆடி­யதால் எனக்குள் இருந்த நெருக்­கடி தணிந்­தது.

கடந்த ஒரு வரு­ட­மாக 20 ஓவர் கிரிக்கெட் போட்­டியில் மட்­டுமே விளை­யா­டி­ய­தன்­மூலம் எனது நிதானம் கலந்த வேகத்தைக் கடைப்­பி­டித்தேன்.

இந்த உலக கிண்­ணத்­தை வெற்­றி­யுடன் தொடங்கி இருப்­பது சிறப்­பான விடயம். அடுத்து மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான போட்டி குறித்து கவனம் செலுத்­துவோம்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக கிண்ணப் போட்டியில் விளையாடிய அணியுடன் ஒப்பிடும் போது தற்போதைய அணி வித்தியாசமானது. ஆனால் ஆற்றல் மிக்கது’’ என்றார் டேவிட் வோர்னர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!