2007 உலக  கிண்ண கிரிக்கெட்டுடன்  ஓய்வு பெற எண்ணினாராம் சச்சின்

0 141

இந்­திய கிரிக்கெட் அணியின் ஜாம்­ப­வானும் இரட்டை உலக சாதனை நாய­க­னு­மான சச்சின் டெண்­டுல்கர், 2007 உலகக் கிண்ண கிரிக்­கெட்­டுடன் ஓய்வு பெற எண்­ணி­ய­தாக கூறி­யுள்ளார்.

லண்­டனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பேசி­ய­போதே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.
‘‘ராகுல் ட்ராவிட் தலை­மை­யி­லான இந்­திய அணி 2007 உலகக் கிண்ணக் கிரிக்கெட்  போட்­டியில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தது. அப் போட்­டியில் இந்­திய அணிக்கு எதிர்­பார்த்த பெறு­பே­றுகள் கிட்­ட­வில்லை. அவ்­வ­ணியை இலங்கை, பங்­க­ளாதேஷ் அணி­களும் வெற்­றி­கொண்­டி­ருந்­தன. 

அந்த தோல்­வி­க­ளுக்கு பிறகு இந்­திய அணி மிகுந்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­னது. இதனால் இந்­திய அணியில் மாற்­றங்கள் தேவை என அனைத்து தரப்­பி­லி­ருந்தும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.  

அத்­த­ரு­ணத்தில் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெற்­று­வி­டலாம் என முடிவு எடுத்­தி­ருந்தேன். ஆனால் எனது சகோ­தரர் இந்த முடிவை ஆத­ரிக்­க­வில்லை. ஆனாலும் எனது முடிவில் இருந்து நான் பின்­வாங்­க­வில்லை.

எனினும், ,மேற்­கிந்­திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் விவியன் ரிச்­சர்ட்­ச­னி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்பு வந்­தது. அவர் என்­னிடம்  சுமார் 45 நிமி­டங்கள் உரை­யா­டினார்.

அப்­போது நீங்கள் ஓய்வு பெற வேண்டாம். தொடர்ந்து கிரிக்கெட் விளை­யா­ட­வேண்டும் என்று என்­னிடம் அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றே எனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டேன்”  என்றார் சச்சின் டெண்டுல்கர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!