பஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கியவர், பரிசோதகரே தன்னைத் தாக்கியதாக பொலிஸில் பொய்யான முறைப்பாடு செய்யச் சென்ற போது கைது; பயணிகளும் நடத்துனரும் உண்மையை விளக்கியதால் சிக்கிக் கொண்ட நபர்

0 150

(மயூரன்)

பஸ்ஸில் பயண சீட்டு பரி­சோ­த­கரை தாக்­கிய நபரே பரி­சோ­த­க­ருக்கு எதி­ராக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்யச் சென்­ற­போது பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

 குறித்த சம்­பவம் தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது, யாழ்.கிளி­நொச்­சிக்கு இடையில் சேவையில் ஈடு­பட்­டி­ருந்த பஸ்ஸை கைதடி பகு­தியில் நிறுத்தி அதில் ஏறிய பயண சீட்டு பரி­சோ­த­கர்கள் பய­ணி­களின் பயண சீட்­டுக்­களை பரி­சோ­தித்­தனர்.

அதன்­போது பயணி ஒருவர் பின் பக்க வாசலின் ஊடாக இறங்கி செல்ல முற்­பட்­டுள்ளார். அதன் போது வாசலில் நின்ற பரி­சோ­தகர் மறித்த போது, அவரைத் தாக்கி தள்ளி விட்டு பின் பகுதி வாசலின் ஊடாக இறங்கி தப்பி ஓடி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து பஸ் பய­ணி­க­ளுடன் பரி­சோ­த­கர்­களும் சென்று சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில் சம்­பவம் தொடர்பில் முறைப்­பாடு செய்து கொண்­டி­ருந்த போது பரி­சோ­த­கரை தாக்கி விட்டு சென்ற நபர் மோட்டார் சைக்­கிளில் பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்­துள்ளார்.

தன் மீது பரி­சோ­தகர் தாக்கி தனது கைய­டக்கத் தொலை­பே­சியை பறித்து தன்னை பஸ்­ஸி­லி­ருந்து தள்ளி விட்டார் என பொலி­ஸா­ரிடம் அவர் தெரி­வித்தார்.

பரி­சோ­தகர் நடத்­துனர் மற்றும் பய­ணிகள் சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தெளிவு படுத்தியதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!