போதைப் பொருள் பாவனைக்காக தென்னந் தோப்புகளில் தேங்காய் திருடி விற்பனை செய்யும் இளைஞர்கள் 250 தேங்காய்களுடன் கைது

0 92

(மது­ரங்­குளி நிருபர்)

ஹெரோயின் போதைப் பொருள் பாவிப்­ப­தற்­கான பணத்தைத் தேடிக் கொள்­வ­தற்கு தென்னந் தாப்­பு­களில் தேங்­காய்­களைத் திரு­டிய இளை­ஞர்கள் சிலரைக் கைது செய்­துள்­ள­தாக தும்­ம­ல­சூ­ரிய பொலிஸார் தெரி­வித்­தனர்.

தும்­ம­ல­சூ­ரிய பொலி­ஸா­ருக்கு நேற்று முன்­தினம் தும்­ம­ல­சூ­ரிய உடு­பத்­தாவ பிர­தேச மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலரே கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இந்த இளை­ஞர்கள் ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யி­ருந்த நிலையில் ஹெரோயின் வாங்­கு­வ­தற்கு பணத்தைத் தேடிக் கொள்­வ­தற்­கா­கவே அவர்கள் இவ்­வாறு தேங்காய் திருட்டில் ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

திரு­டிய தேங்­காய்­களை விற்று அந்தப் பணத்தில் ஹெரோயின் வாங்­கி­யுள்­ளமை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் கைது செய்­யப்­பட்ட திரு­டப்­பட்ட 250 தேங்­காய்­களும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!