வாடகைக் காரைச் சுற்றி வேலி அமைத்த நபர்

0 164

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது வீட்டு வளா­கத்தில் அனு­ம­தி­யின்றி தரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த வாடகைக் கார் ஒன்றைச் சுற்றி வேலி அமைத்­துள்ளார்.

வோஷிங்டன் மாநி­லத்தின் சியாட்டில் நகரைச் சேர்ந்த டேன் ஸ்மித் என்­ப­வரே இவ்­வாறு காரைச் சுற்றி வேலி அமைத்தார்.தனது வீட்டு வளா­கத்தில் காரை தரித்து வைத்­தவர் யார் என்­பது தனக்குத் தெரி­யாது எனவும், அது தனது வீட்டில் வாட­கைக்கு குடி­யி­ருப்­ப­வர்­க­ளு­டை­யது அல்ல எனவம் டேன் ஸ்மித் கூறி­யுள்ளார்.

குறித்த வாடகைக் கார் நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொண்ட டேன் ஸ்மித், காரை அகற்­று­வ­தற்கு 2 மணித்­தி­யா­லங்கள் அவ­காசம் வழங்­கினார். அதன்­பின்­னரும் கார் அகற்­றப்­பட்­டா­ததால், அதை வெளியே எடுக்க முடி­யாத வகையில் காரைச் சுற்றி அவர் வேலி அமைத்தார்.

தனது வீட்டு வளா­கத்தில் காரை தரித்து வைத்­த­மைக்­காக நாளொன்­றுக்கு 65 டொலர்கள் வீதம் வழங்க வேண்டும் எனவும், வேலி அமைத்­த­மைக்­கான செல­வாக 300 டொலர்கள் வழங்க வேண்டும் எனவும் டேன் ஸமித் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!