குழந்தைகளுக்கான தவழும் போட்டி

0 175

ஒரு வய­துக்­குட்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான தவழும் போட்டி லித்­து­வே­னி­யாவில் நடை­பெற்­றது.7 மாதம் முதல் 11 மாத வய­து­டைய குழந்­தை­க­ளுக்­காக இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 20 ஆவது வரு­ட­மாக இப்­போட்டி நடத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

லித்­து­வே­னியத் தலை­நகர் விலி­னி­யஸில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற இப்­போட்­டி­யில் 25 குழந்­தைகள் பங்­கு­பற்­றின. 5 மீற்றர் தூரம் கொண்­ட­தாக இப்­போட்டி அமைந்­தி­ருந்­தது.

குழந்­தை­களின் பெற்றோர், தாத்தா, பாட்­டிமார், மற்றும் உற­வி­னர்கள் பலர் இக்­கு­ழந்­தை­களை உற்­சா­கப்­ப­டுத்­தினர்.

விளை­யாட்டுப் பொருட்கள், உணவுக் கொள்­க­லன்கள் முத­லி­ய­வற்றைக் காண்­பித்தும் குழந்­தைகள் தவழ்­வதை சில குழு­வினர் உற்­சா­கப்­படுத்தினர். 11 மாத வயதான இக்னஸ் எனும் குழந்தை இப்போட்டியில் முதலிடம் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!