மினி ஸ்கேர்ட் அணியும் ஊழியர்களுக்கு விசேட போனஸ்! ரஷ்ய நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை

0 153

வேலைத்­த­ளத்­துக்கு குட்டைப் பாவாடை (மினி ஸ்கேர்ட்) அணிந்து வரும் பெண்­க­ளுக்கு விசேட போனஸ் வழங்­கு­வ­தாக அறி­வித்த ரஷ்ய நிறு­வ­ன­மொன்று விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டுள்­ளது.

அலு­மி­னிய உற்­பத்தி நிறு­வ­ன­மான டெட்­புரூப் எனும் நிறு­வ­னமே இந்த அறி­வித்­தலை விடுத்­தது. முழங்­கா­லி­லி­ருந்து 5 சென்­ரி­மீற்றர் நீளத்­துக்கு அதி­க­ரிக்­காத அளவில் பாவாடை அல்­லது சட்டை அணிந்­து­வரும் பெண்­க­ளுக்கு அவர்­களின் வழக்­க­மான ஊதி­யத்­தை­விட 100 ரஷ்ய ரூபிள் (சுமார் 270 இலங்கை ரூபா) போனஸ் வழங்­கப்­படும் என அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது.

(வைப்பகப்படம்)

ஜூன் 30 ஆம் திக­தி­வரை இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­படும் எனவும், தாம் குட்டைப் பாவாடை அல்­லது குட்­டை­யான சட்டை அணிந்து வந்­ததை நிரூ­பிப்­ப­தற்­காக புகைப்­படம் ஒன்றை நிறு­வ­னத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்­நி­ற­ுவனம் தெரி­வித்­தி­ருந்­தது.

டெட்­புரூப் நிறு­வ­ன­மானது 2014 குளிர்­கால ஒலிம்பிக் போட்டிகள் மற்­றும் 2018 உலக கிண்ணப் போட்­டி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த ஒரு நிறு­வ­ன­மாகும்.

இந்­நி­று­வ­னத்தின் மேற்­படி அறி­விப்பை பெண்­ணி­ய­வா­திகள் பலர் விமர்­சித்­துள்­ளனர்.

ஆனால், தம்­மீ­தான குற்­ற­ச்சாட்­டு­களை அந்­நி­று­வனம் நிரா­க­ரித்­துள்­ளது.

தமது பெண் ஊழி­யர்களுக்கு பெண் தன்­மையை உண­ரச்­செய்­வதே இதன் நோக்கம் எனவும், ஏற்கெனவே 60 பேர் இத்திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர் எனவும் இந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!