வரலாற்றில் இன்று ஜூன் 04 : 1989 தியனமென் சதுக்கத்தில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கொல்லப்பட்டனர்

0 103

1783: பிரான்ஸை சேர்ந்த மொன்ட்­கோல்­பியர் சகோ­த­ரர்கள் முதல் தட­வை­யாக வெப்ப வாயு பலூனை பகி­ரங்­க­மாக இயக்கிக் காண்­பித்­தனர்.

1794: ஹெய்ட்­டியின் போர்ட் ஒவ் பிரின்ஸ் நகரை பிரித்­தா­னிய படைகள் கைப்­பற்­றின.

1802: பிரெஞ்சு மன்னர் 4ஆம் சார்ள்ஸ் இமா­னுவேல், தனது மனைவி மேரி குளோ­டில்டே மர­ண­ம­டைந்த துய­ரத்தில் அர­சு­ரி­மையை துறந்தார். அவரின் சகோ­தரர் விக்டர் இமா­னுவேல் புதிய மன்­ன­ரானார்.

1876: அமெ­ரிக்­காவின் கிழக்கு மேற்கு பகு­தி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது கடு­கதி ரயில் தனது பய­ணத்தை பூர்த்தி செய்­தது.

கிழக்கு கரை­யோ­ரத்­தி­லுள்ள நியூயோர்க்­கி­லி­ருந்து புறப்­பட்ட ரயில் 83 மணித்­தி­யா­லங்கள், 39 நிமி­டங்­க­ளின்பின் மேற்குக் கரை­யோ­ரத்­தி­லுள்ள சான்­பி­ரான்­ஸிஸ்கோ நகரை சென்­ற­டைந்­தது.

1896: பெற்­றோலில் இயங்கும் தனது முத­லா­வது வாக­னத்தின் வெற்­றி­க­ர­மான சோத­னையை ஹென்றி போர்ட் நடத்­தினார்.

1912: ஊழி­யர்­க­ளுக்கு குறைந்த பட்ச ஊதி­யத்தை நிர்­ணயம் செய்த முத­லா­வது அமெ­ரிக்க மாநி­ல­மா­கி­யது மஸா­சு சூசெட்ஸ்.

1917: முத­லா­வது புலிட்சர் விருது வழங்கல் விழா நடை­பெற்­றது.

1919: பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிப்­ப­தற்­கான அமெ­ரிக்­காவின் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் அங்­கீ­க­ரித்­தது.

1920: முதலாம் உலக யுத்­தத்தின் முடிவில் நேச நாடு­க­ளு­ட­னான ட்ரைனன் உடன்­ப­டிக்­கையின் மூலம் தனது நிலப்­ப­ரப்பில் 71 சத­வீ­தத்­தையும் மக்கள் தொகையில் 63 சத­வீ­தத்­தையும் ஹங்­கேரி இழந்­தது.

1928: சீன ஜனா­தி­பதி ஸாங் ஸுவோலின், ஜப்­பா­னிய முக­வர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1943: ஆர்­ஜென்­டீ­னாவில் இரா­ணுவப் புரட்சி மூலம் ஜனா­தி­பதி ரமோன் காஸ்ட்­டில்லோ ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

1944: ஜேர்மன் நீர்­மூழ்கி­ யொன்றை அமெ­ரிக்க கடற்­படை கைப்­பற்­றி­யது. 19 ஆம் நூற்­றாண்­டின்பின் எதிரி கடற்­க­ல­மொன்றை அமெ­ரிக்கப் படை­யினர் கைப்­பற்­றி­யமை இதுவே முதல் தட­வை­யாகும்.

1967: பிரித்­தா­னிய விமா­ன­மொன்று அந்­நாட்டின் ஸ்டொக்போர்ட் நகரில் விபத்­துக்­குள்­ளா­னதால் 72 பேர் உயி­ர­ழந்­தனர்.

1970: பிரிட்­ட­னி­ட­மி­ருந்து டொங்கா சுதந்­திரம் பெற்­றது.

1979: கானாவில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.

1988: சோவியத் யூனியனில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 91 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1989: பெய்ஜிங் நகரில் திய­னமென் சதுக்­கத்தில் மாண­வர்கள் மேற்­கொண்­டி­ருந்த ஆர்ப்­பாட்டம் சீன இரா­ணு­வத்தால் வன்­மு­றை­யுடன் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. நூற்­றுக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர். எனினும் சரி­யான எண்­ணிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

1989: ஈரா­னிய ஆன்­மீகத் தலைவர் ஆயத்­துல்லா கொமெய்னி கால­மா­ன­தை­ய­டுத்து, புதிய ஆன்­மீகத் தலை­வ­ராக அலி கமேனி தெரி­வானார்.

1989: ரஷ்­யாவில் இரு ரயில்கள் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த இடமொன்றுக்கு அருகில் வாயுக்குழாயொன்று வெடித்ததால் 575 பேர் உயிரிழந்தனர்.

2001: நேபாளத்தின் கடைசி மன்னராக கயனேந்திரா முடிசூடினார்.

2015: கானாவின் ஆக்ரா நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 256 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!