வரலாற்றில் இன்று ஜூன் 05 : 2016 சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் 2031 வீடுகள் சேதம்

0 96

1849: நோர்­வேயில் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக மன்­ன­ராட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

1832: பிரான்ஸில் மன்னர் லூயிஸ் பிலிப்பை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்­காக பாரிஸ் நகரில் கிளர்ச்­சிகள் ஏற்­பட்­டன.

1915: டென்­மார்க்கில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்பட்­டது.

1942: பல்­கே­ரியா, ஹங்­கேரி, ருமே­னியா நாடு­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா யுத்தப் பிர­க­டனம் செய்­தது.

1945: ஜேர்­ம­னியின் அரச அதி­கா­ரத்தை நேச நாடு­களின் இரா­ணுவ கூட்­ட­மைப்பு பொறுப்­பேற்­றது.

1946: அமெ­ரிக்­காவின் இலினோய்ஸ் மாநி­லத்தில் ஏற்­பட்ட தீ விபத்­தினால் 61 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1949: தாய்­லாந்தின் முத­லா­வது பெண் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, ஒராபின் சியாகன் பத­வி­யேற்றார்.

1959: சிங்­கப்பூரின் முத­லா­வது அர­சாங்கம் பத­வி­யேற்­றது.

1963: ஈரானில் ஆன்­மீகத் தலைவர் ஆய­துல்லா ருஹோல்லாஹ் கொமேனி, ஷா மன்­னரின் அர­சாங்­கத்தால் கைது செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன.

1967: இஸ்­ரே­லுக்கும் அரபு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான 6 நாள் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1968: அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­ன­டியின் சகோ­த­ரரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான ரொபர்ட் எவ். கென்­னடி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுடப்­பட்டார். மறுநாள் அவர் உயி­ரி­ழந்தார்.

1969: சர்­வ­தேச கம்யூனிஸ மாநாடு மொஸ்கோ நகரில் ஆரம்­ப­மா­கி­யது.

1977: சீஷெல்ஸ் அர­சாங்­கத்துக் ஏதி­ராக புரட்சி இடம்­பெற்­றது.

1989: சீனாவின் திய­னமென் சதுக்­கத்தில் ஆர்ப்­பாட்­டத்தை அடக்­கு­வ­தற்­காக முன்­னேறி வந்த இரா­ணுவத் தாங்­கி­களை இனங்­கா­ணப்­ப­டாத நிரா­யு­த­ பா­ணி­யான ஆர்ப்­பாட்­டக்­காரர் ஒருவர் சுமார் அரை மணித்­தி­யாலம் தடுத்து நிறுத்­தினார்.

2003: பாகிஸ்தான், இந்­தி­யாவின் சில பிராந்­தி­யங்­களில் சுமார் 50 பாகை செல்­சியஸ் அள­வுக்கு வெப்­ப­நிலை உயர்ந்­தது.

2006: சேர்­பியா – மொன்­டே­னெக்ரோ இரு நாடு­க­ளாக பிரிந்­தது.

2009: பெரு நாட்டில் 65 நாட்கள் இடம்­பெற்ற சிவில் ஒத்­து­ழை­யாமை போராட்­டத்தின் பின்னர் பாது­காப்புப் படை­க­ளு­ட­னான மோதலில் 65 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2015: மலே­ஷி­யாவில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 18 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2016: கொஸ்­கம, சாலாவ பகு­தியில் இரா­ணு­வத்தின் ஆயுதக் களஞ்­சி­யத்தில் ஏற்­பட்ட பாரிய வெடிப்புச் சம்­ப­வத்தால் இரா­ணுவ வீரர் ஒருவர் பலி­யா­ன­துடன் 8 பேர் காய­ம­டைந்­தனர். ஆயுதக் களஞ்­சி­யத்தை சுற்­றி­யி­ருந்த 2031 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் சேத­ம­டைந்­தன.

2017: பயங்­க­ர­வா­தத்­துக்கு உதவுதல், பிராந்திய ஸ்திரத்தன்மை யை குலைத்தல் ஆகிய குற்றங்களை சுமத்தி, கத்தாருடனான உறவுகளை சவூதி அரேபியா, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, லிபியா, யேமன் ஆகிய 6 அரேபிய நாடுகள் துண்டித்துக் கொண்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!