மேக் அப் இல்லாத படத்தை துணிச்சலாக வெளியிட்ட காஜல் அகர்வால்

Kajal Aggarwal without makeup

0 372

நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாத நிலையில் பிடித்துக்கொண்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
நடிகைகள் என்றால் மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளது.

இந்நிலையில்  தான் மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாத அவர் முகத்தில் புள்ளி, புள்ளியாக உள்ளது.

அந்த புள்ளிகளை யாரும் கிண்டல் செய்யவில்லை. மாறாக ‘புள்ளிகள் உங்களுக்கு அழகாக உள்ளன. இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட தனி தைரியம் வேண்டும்’ என்று அவரை பாராட்டியுள்ளார்கள்.  மேக்அப் இல்லாத தனது புகைப்படங்களுடன் குறிப்பொன்றையும் வெளியிட்டிருந்தார் காஜல் அகர்வால்.

”மக்கள், தங்களை எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை, நாம் உடல் ஈர்ப்பில் வெறிபிடித்த தன்மை கொண்ட உலகில் வாழ்கிறோம் அல்லது யாரின் மீது நாம் சுய மதிப்பு கொண்டுள்ளோமோ மற்றும் என்ன விஷயத்தை பெருமிதம் கொள்கிறோமோ அதனை சமூக வலைதளங்கள் விழுங்கிவிடுகின்றன.

கோடிக்கணக்கான பணம் அழகு சாதனப் பொருள்களுக்காக செலவுசெய்கிறோம். அது, நம்முடைய உடல் சரியாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. நமக்கு வேறு ஒரு உருவத்தை நாம் செதுக்கிக் கொள்வதோ அல்லது நம்மை வரையறுத்துக்கொள்வதற்கு மாறாக, எப்போது நாம் யார் என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்குகிறோமோ அதுதான், நாம் சந்தோசமாக இருப்பதற்கான ஒரே வழி.

ஒப்பனைகள், நம்முடைய வெளிப்புறத்தை அழகுப்படுத்தினாலும், அது, நம்முடைய குணத்தை கட்டமைக்காது. அது நாம் யார் என்பதை வரையறுக்காது’ எனத் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால்.  நடிப்பில் காஜல் அகர்வாலின் புகைப்படங்களை பார்த்து பாராட்டினாலும் நீங்கள் சும்மா ஒரு போட்டோவை வெளியிட்டுவிட்டு தத்துவம் பேச வேண்டாம்.

அடுத்த புகைப்படத்தில் ஓவராக மேக்கப் போட்டுத் தான் இருப்பீர்கள். ஏதோ உங்களுக்கு மூடு சரியில்லை என்று மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துவிட்டு ஏதோ பெரிய இவர் மாதிரி பேச வேண்டாம் என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

‘ நீங்கள் ஏதோ ஒரு நாள் தான் மேக்கப் போடாமல் புகைப்படம் எடுக்கிறீர்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப் போடாமல் தான் எப்பொழுதுமே உள்ளார். படங்களில் கூட மேக்கப் இல்லாமல் நடிக்கிறார். அவரிடம் இருந்து உண்மையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள்.

நடிகை களால் மேக்கப் போடாமல் இருக்க முடியாது என்ற எண்ணத்தை சாய் பல்லவி எப்பொழுதோ மாற்றிவிட்டார் என சிலர் கூறியுள்ளனர்.

எனினும், திரையுலக பிரபலங்கள் சிலர் ‘காஜல் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள். உங்களின் முகத்தில் உள்ள புள்ளிகள் அழகுக்கு அழகு சேர்த்துள்ளன என்று பாராட்டித் தள்ளி யுள்ளனர். உங்களின் கண்ணில் இருக்கும் ஒளியே தனி அழகு’ எனக் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!