அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்

0 105

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ‘ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் திகதி வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய், தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அப்பா விஜயின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாரூக்கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மெர்சல், கத்தி, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் இரண்டு தோற்றங்களில் நடித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!