மாமியாரின் 2 தொலைபேசிகள், பணத்தை திருடி அடகு வைத்த மருமகன் கைது

0 570

                                                                                                                        (மதுரங்குளி நிருபர்)
பெண் ஒருவரின் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பவுண் தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பனவற்றதை் திருடிய குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் மருமகன் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் நகை மற்றும் கைத்தொலைபேசிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதோடு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டவராவார்.

தனது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் முப்பதாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் குறித்த பெண் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே அப்பெண்ணின் மருமகனான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட தங்கச் சங்கிலியை முப்பதாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்திருந்த நிலையிலும் இரண்டு கைத்தொலைபேசிகள் சந்தேக நபரின் வீட்டிலிருந்தும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் பாவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!