ரோஹித் சதம் குவித்தார்: தென் ஆபிரிக்காவை வென்றது இந்தியா

India ease to victory over South Africa

0 403

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 6 விக்கெட்களால் வென்றது.
சௌதாம்ப்டன் ரோஸ் பௌலில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அவ்வணி 9 ஓவர்களில் 227 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹஷிம் ஆம்லாவை 6 ஓட்டங்களுடனும், குவின்டன் டி கொhக் 10 ஓட்டங்களுடனும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹலின் பந்து வீச்சில் டூ பிளெஸ்ஸிஸ் 38 ஓட்டங்களுடனும், வேன்டர் டுஸன் 31 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 31 ஓட்டங்களுடனும வெளியேறினர். பெலுக்வயோ 34 ஓட்டங்களைப் பெற்றார்.

2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார் மோரிஸ். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களைப் பெற்றது தென் ஆபிரிக்கா.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் தவான் 8 ஓட்டங்களுடன் ரபாடா பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

அணித்தலைவர் விராட் கோலி 18 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், பெலுக்வயோ பந்தில், டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ரோஹித், ராகுல் இணைந்து அணியை பலப்படுத்தினர். 42 பந்துகளில் 26 ஓட்டங்களை சேர்த்திருந்த ராகுல், ரபாடா பந்துவீச்சில் டு பிளெஸ்ஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின், ரோஹித் சர்மாவும்-தோனியும் இணைந்து பொறுப்பாக துடுப்பெடுத்தாடினர் ரோஹித் சர்மா 144 பந்துகளில 2 சிக்ஸர், 13 பவுண்டரி உட்பட் 122 ஓட்டங்களைக் குவித்து தனது 23-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

எம்.எஸ். தோனி, 34 ஓட்டங்கள் பெற்ற நிலையில் கிறிஸ்மோரிஸ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 230 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா.

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!