அமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டர் பதிவுக்குப் பேராயர் இல்லம் கண்டனம்

0 70

(எம்.மனோ­சித்ரா)

பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த அத்­து ­ர­லியே ரத்ன தேரரைச் சந்­திக்க சென்­றமை இனங்­க­ளுக்­கி­டை யில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் என்று நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டி­ருந்­த­மைக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யி­டு­வ­தாக கொழும்பு பேராயர் இல்லம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

தலதா மாளிகை வளா­கத்தில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்ன தேரரை பார்ப்­ப­தற்கு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை சென்­றி­ருந்­ததை மிகவும் தவ­றான விதத்தில் விளங்கிக் கொண்டு நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வொன்றை இட்­டுள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தேவா­ல­யங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­களில் நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி கத்­தோ­லிக்க மக்­களே பலி­யா­கினர். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யமை மற்றும் பயங்­க­ர­வா­தி­களை ஆத­ரித்­தமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் கிழக்கு, மேல் மாகாண ஆளு­னநர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்­கா­கவே ரத்ன தேரர் இந்த உண்­ணா­வி­ரதத்­தை ஆரம்­பித்தார். எனவே இந்த போராட்­டத்­திற்கு கிறிஸ்­த­வர்கள் என்ற ரீதியில் எமது முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அத்­தோடு சிங்­கள, தமிழ், முஸ்லிம் என வெவ்வேறு இன மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்கள் வாழக்­கூ­டிய அமை­தி­யான நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நாம் தொடர்ந்தும் எமது ஆத­ர­வினை வழங்க வேண்டும்.

ஆனால் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர போன்­ற­வர்கள் இதனை தவ­றாக புரிந்து கொண்டு பிழை­யான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர். கர்­தினால் கண்­டிக்குச் சென்­றமை பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் என்று மங்­கள சம­ர­வீர டுவிட்­டரில் பதி­விட்­டுள்­ள­மைக்கு கொழும்பு பேராயர் இல்லம் கடும் கண்­ட­னத்தை தெரி­விக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நூற்­றுக்­க­ணக்­கான கிறிஸ்­தவ மக்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட போதும், மதப்­பி­ரி­வினை இன்றி முஸ்லிம் மக்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற் ­பட்ட சந்­தர்ப்­பங்­களில் பேராயர் கர்­தினால் அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு பொறுமையுடனும் செயற்பட்டார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்ப தோடு கர்தினாலுக்கு எமது மரியாதை யினையும் தெரிவித்துக் கொள்கின் றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!