திரையுலகினரை ஆச்சரியப்படுத்திய சமந்தா

0 218

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது 5 நிமிட காட்சிக்கு பல இலட்சங்கள் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது நாகார்ஜுனா, ரகுல்பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் ‘மன்மதடு -2’ தெலுங்கு படத்தில் கௌரவ தோற்றத்தில் வருகிறார். 5 நிமிடம் மட்டுமே இந்தக் காட்சி இடம் பெறுகிறது.

இதில் நடிக்க சமந்தா ரூ.35 இலட்சம் சம்பளம் வாங்கியதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி நடிகர், நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மார்க்கெட் சரிவது வழக்கம்.

ஆனால் சமந்தாவுக்கு அது ஏறுமுகமாகவே உள்ளது. அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.

அவருக்கு பதிலாக இயக்குநர்­களும், தயாரிப்பாளர்­களும் சமந்தாவை தேர்வு செய்கின்ற­னர். இதனால் சம்பளத்தை­யும் உயர்த்தி இருக்கிறார்.

ஒரு படத்துக்கு ரூ.3 கோடி கேட்கிறார் என்கின்றனர். அந்த தொகையை கொடுத்தும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்கின்றனர்.

தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற கதாநாயகிக்கு முக்கியத்து­வம் உள்ள படத்தில் நடிக்கிறார்.

தமிழில் த்ரிஷா நடித்து வெற்றிகர­மாக ஓடிய ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!