சல்மானின் ‘பாரத்’ முதல் நாளில் 42.3 கோடி ரூபாவை வசூலித்தது

0 447

சல்மான் கான், கத்­ரினா கைப் நடித்த பாரத் எனும் பொலிவூட் திரைப்­படம் கடந்த புதன் கிழமை வெளி­யா­கி­யது. இந்­தி­யாவில் சுமார் 4700 திரை­ய­ரங்­கு­க­ளிலும் வெளி­நா­டு­களில் 1300 திரை­ய­ரங்­கு­க­ளி­லு­மாக மொத்­த­மாக சுமார் 6000 திரை­ய­ரங்­கு­களில் இப்­படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இப்­படம் முதல்­நாளில் சுமார் 42.3 கோடி கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­துள்­ளது.ரமழான் நோன்புப் பெரு­நாளை (ஈத்) முன்­னிட்டு இப்­படம் 5 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஈத் பெரு­நாளை முன்­னிட்டு வெளி­யாகும் சல்மான் கானின் திரைப்­ப­டங்கள் முதல் நாளில் அதிக வசூலை குவித்­துள்­ளன.

2016 ஆம் ஆண்டு ஈத் வெளி­யாக அமைந்த சுல்தான் படம் முதல் நாளில் 36.54 கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­தது.

2017 ஆம் ஆண்டின் ரியூப்லைட் படம் 21.15 கோடி ரூபா­வையும் கடந்த வருடம் ஈத் வெளி­யீ­டாக அமைந்த ரேஸ் 3 படம் 29.17 கோடி ரூபா­வையும் வசூ­லித்­தன.

இந்­நி­லையில், இவ்­வ­ருடம் இம்­முறை வெளி­யா­கி­யுள்ள பாரத் படம் 42.3 கோடி இந்­திய ரூபாவை (108 கோடி இலங்கை ரூபா) வசூ­லித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்­படம் 100 கோடி இந்­திய ரூபா (சுமார் 255 கோடி இலங்கை ரூபா) செலவில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அலி அப்பாஸ் ஸாபர் இயக்­கிய இப்ப­டத்தில் சல்மான், கத்­ரி­னா­வுடன், ஜெக்கி ஷெரோப், தபு, திஷா பட்­டானி, சுனில் குரோவர் முத­லா­னோரும் நடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மும்­பையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற பாரத் படத்தின் விசேட வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய சல்மான் கான், கத்ரினா கைப், திஷா பட்டானி ஆகியோரை படங்களில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!