பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக ஹெலியில் தொங்கும் அக் ஷய் குமார்

0 317

அக் ஷய் குமார் கதா­நா­ய­க­னாக நடிக்கும் ‘சூரி­ய­ வன்ஷி’ பொலிவூட் திரைப்­ப­டத்தின் சாகசக் காட்­சிகள் தாய்­லாந்தின் பேங்கொக் நகரில் படம்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ரோஹித் ஷெட்டி இயக்கும் இப்­ப­டத்தில் பொலிஸ் பயங்­க­ர­வாத ஒழிப்புப் பிரிவின் தலைமை அதி­கா­ரி­யாக அக் ஷய் குமார்  நடிக்­கிறார். கதா­நா­ய­கி­யாக கத்­ரினா கைப் நடிக்­கிறார்.இப்­ப­டத்­துக்­காக அக் ஷய் குமார் ஹெலி­கொப்­டரில் தொங்கிக் கொண்டு செல்லும் காட்சி பேங்­கொக்கில் பட­மாக்­கப்­பட்­டது.

கரன் ஜோஹரின் தம்மா புர­டக் ஷன்ஸ் நிறு­வ­ன­மா­னது, ரிலையன்ஸ் என்­டர்­டெய்ன்மென்ட் மற்றும் கோப் ஒவ் குட் பில்ம்ஸ் நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து இப்­ப­டத்தை தயா­ரிக்­கி­றது. இந்­திய சினிமா வர­லாற்றில் அதிக செலவில் தயா­ரிக்­கப்­படும் பொலிஸ் கதை படம் ‘சூரியவன்ஷி’ எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!