ரெப் இசைத்துறையின் முதலாவது பில்லியனர் பாடகர் ஜே-இஸட்

0 967

அமெ­ரிக்­காவின் புகழ் பெற்ற பாடகர் ஜே-இஸட் (Jay-Z) , ரெப் பாட­கர்­களில் உலகின் முத­லா­வது பில்­லி­யனர் (100 கோடி டொலர் சொத்­து­களைக் கொண்­டவர்) என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

49 வய­தான ஜே- இஸட்டின் உண்­மை­யான பெயர் ஷோன் கொறி கார்ட்டர் ஆகும். ரெப் பாடகர், பாட­லா­சி­ரியர், பாடல் தயா­ரிப்­பாளர், தொழி­லதிபர் முத­லான பல முகங்­களைக் கொண்­டவர் இவர்.  இரு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக ரெப் இசைத்­து­றையில் முன்­னி­லையில் உள்ள ஜே -இஸட், ரெப் இசை வர­லாற்றின் மிகச் சிறந்த பாட­கர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­ப­டு­வ­துடன், ஒரு கலா­சார சின்­ன­மா­கவும் மதிக்­கப்­ப­டு­கிறார்.

இவர் புகழ்­பெற்ற பாடகி பியோன்ஸே நொவெல்ஸை திரு­மணம் செய்­தவர். இத்­தம்­ப­தி­யி­ன­ருக்கு 3 பிள்­ளைகள் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இசைத்­து­றை­யி­லுள்­ள­வர்­களில் மிக அதி­க­மாக சம்­பா­தித்த தம்­ப­தி­யி­ன­ராக இவர்கள் கரு­தப்­ப­டு­கின்­றனர்.

ஜே-இஸட், மனைவி பியோன்ஸே

இந்­நி­லையில், பாடகர் ஜே- இஸட்டின் மொத்த செல்வ மதிப்பு ஒரு பில்­லியன், அதா­வது 100 கோடி அமெ­ரிக்க டொலர். (சுமார் 17,639 கோடி இலங்கை ரூபா, 6,939. கோடி இந்திய ரூபா) என போர்ப்ஸ் சஞ்­சிகை மதிப்­பிட்­டுள்­ளது. இதன்­மூலம் ரெப் பாட­கர்­களில் பில்­லியன் டொலர் செல்­வத்தைக் கொண்ட முதல் ஆளாக பாடகர் ஜே இஸட் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, ஜே -இஸட்டின் மனை­வி­யான பாடகி பியோன்ஸே நொவெல்ஸின் (37) சொத்து மதிப்பு 40 கோடி டொலர் (சுமார் 7055 கோடி இலங்கை ரூபா, 2567. கோடி இந்திய ரூபா ) என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!