ஜேம்ஸ் பொண்ட் படப்பிடிப்புத் தளத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம்; ஒருவர் காயம்

0 337

ஜேம்ஸ் பொண்ட் படப்­பி­டிப்புத் தளத்தில் நடந்த பாரிய வெடிப்புச் சம்­ப­வத்தில் படப்­பி­டிப்புத் தளம் சேத­ம­டைந்­த­துடன், ஒருவர் காய­ம­டைந்த சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது.

இயக்குநர் கெறி ஜோஜி புகனகாவுடன், பொண்ட் 25 நடிகர் டேனியல் கிறேக், நடிகைகள், லியோ டேடொக்ஸ், அனா டீ ஆர்மஸ், நயோமி ஹரிஸ், லஷானா லின்ச்,

 

25 ஆவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்­ப­டத்தின் தயா­ரிப்புப் பணிகள் ஆரம்­ப­மா­கி­ நடை­பெ­று­கின்­றன. டேனியல் கிறேக், 5 ஆவது தட­வை­யாக இப்­ப­டத்தில் ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடிக்­கிறார்.

இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு இங்­கி­லாந்தின் பக்­கி­ஹாம்­ஷ­ய­ரி­லுள்ள பின்வூட் ஸ்டூடி­யோவில் நடை­பெற்று வரு­கின்­றது. இந்­நி­லையில், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மேற்­படி படப்­பி­டிப்புத் தளத்தில் ஸ்டன்ட் காட்­சி­யொன்று பட­மாக்­கப்­பட்­ட­போது, கட்­டுப்­பாட்­டு­ட­னான வெடிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இதில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக படப்­பி­டிப்புத் தளத்தின் சுவர்­களும் கூரையும் சேத­ம­டைந்­தன. 3 பாரிய வெடிப்­புச்சத்தங்கள் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­ப­வத்­தின்­போது, படப்­பி­டிப்பு செட்டில் இருந்த எவரும் காய­ம­டை­ய­வில்லை எனவும், ஆனால், செட்­டுக்கு வெளி­யி­லி­ருந்த ஊழியர் ஒரு­வ­ருக்கு சிறிய காயம் ஏற்­பட்­டது எனவும், படக்­கு­ழு­வினர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளனர்.

ஏற்­கெ­னவே இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு ஜமெய்க்­காவில் நடை­பெற்­ற­போது நடிகர் டேனியல் கிறேக்கின் காலில் காயம் ஏற்­பட்­டது.

இதனால் அவ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் அவர் இரு வார காலம் ஓய்­வெ­டுக்க வேண்டும் என மருத்­து­வர்கள் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தனர்.

பொண்ட் 25 என குறிப்­பி­டப்­படும் இப்­ப­டத்­துக்கு இன்னும் பெய­ரி­டப்­ப­ட­வில்லை.

கேறி ஜோஜி புக­னகா இப்­ப­டத்தை இயக்­கி­வ­ரு­கிறார். 2020 ஏப்ரல் மாதம் இப்­படம் வெளி­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!