வரலாற்றில் இன்று ஜூன் 06: 2004 தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்

0 99

1654: சுவீ­டனின் அரசி கிறிஸ்­டினா, அந்­நாட்டில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கத்­தோ­லிக்க சம­யத்தை தழுவ விரும்­பி­யதால் அர­சு­ரி­மையை துறந்தார்.

1674: இந்­தி­யாவின் மஹ­ராஷ்­டிரா ராஜ்­யத்தின் மன்­ன­ராக சிவாஜி முடி­சூ­டினார்.

1683: உலகின் முத­லா­வது பல்­க­லைக்­க­ழக நூத­ன­சாலை இங்­கி­லாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் திறக்­கப்­பட்­டது.

1792: ரஷ்­யாவின் மொஸ்கோ நகரில் ஏற்­பட்ட பாரிய தீயினால் 18,000 வீடுகள் உட்­பட அந்­ந­கரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்­தது.

1833: அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட்ரூ ஜக்ஸன், ரயில் பயணம் செய்த முதல் ஜனா­தி­ப­தி­யானார்.

1844: வை.எம்.சி.ஏ. அமைப்பு லண்­டனில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1882: மும்­பையை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் சுமார் ஒரு லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர்.

1944: 2 ஆம் உலக யுத்­தத்தில் பிரான்ஸின் நோர்­மண்டி கடற்­க­ரையில் நேச­நா­டு­களின் 155,000 துருப்­பினர் தரை­யி­றங்கி தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர். வர­லாற்றின் மிகப் பெரிய ஈரூ­டக இரா­ணுவ நட­வ­டிக்­கை­யாக இது உள்­ளது.

1971: சோயுஸ் 2 விண்­கலம் ஏவப்­பட்­டது.

1971: அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்றும் இரா­ணுவ விமா­ன­மொன்றும் நடு­வானில் மோதிக்­கொண்­டதால் 50 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1981: இந்­தி­யாவின் பீஹார் மாநி­லத்தில் பக்­மதி நதிக்கு மேலாக பயணம் செய்­து­கொண்­டி­ருந்த ரயி­லொன்று பாதையை விட்டு விலகி நதியில் பாய்ந்­ததால் ஐந்­நூற்றுக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தனர்.

1982: இஸ்ரேல், லெபனான் நாடு­க­ளுக்­கி­டையில் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1993: மொங்­கோ­லி­யாவில் முத­லா­வது நேரடி ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது.

2002: கிறீஸ், லிபி­யா­வுக்கு இடை­யி­லான மத்­திய தரைக்­க­ட­லுக்கு மேலாக சுமார் 10 மீற்றர் விட்­ட­மு­டைய விண்­கல்­லொன்று வெடித்து சித­றி­யது. இதன்­போது வெளி­வி­டப்­பட்ட சக்தி நாக­சாக்கி அணு­குண்டு வெடிப்பை விட வலி­மை­யா­னது என மதிப்­பி­டப்­பட்­டது.

2004: இந்­திய நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இரு அவை­க­ளி­னதும் இணைந்த கூட்­ட­மொன்­றின்­போது ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமினால், தமிழ் செம்மொழி அங்கீகாரம் அளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2012: சிரியாவின் ஹமா நகருக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!