வரலாற்றில் இன்று ஜூன் 07 : 1975 முதலாவது உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

0 310

1099: முத­லா­வது சிலுவைப் போரில் ஜெரு­ஸலேம் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­கி­யது.

1494: புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உல­கத்தை (வட அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா) இரு நாடு­க­ளுக்கும் இடையில் பிரித்­துக்­கொள்­வது தொடர்­பாக ஸ்பெய்­னுக்கும் போர்த்­துக்­க­லுக்கும் இடையில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1654: பிரான்ஸில் 16ஆம் லூயி மன்­ன­னுக்கு முடி­சூ­ட்டப்­பட்­டது.

1692: ஜமைக்­காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்­பத்­தினால் 3 நிமி­டங்­களில் அழிந்­தது. 1600 பேர் பலி­யா­கினர். சுமார் 3000 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

1832: ஐரிஸ் குடி­யேற்­ற­வா­சிகள் மூலம் கன­டாவில் கொலரா நோய் பர­வி­யது. இதனால் சுமார் 6000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1862: அடிமை வர்த்­த­கத்தை ஒழிப்­ப­தற்கு அம­ரிக்­காவும் பிரிட்­டனும் இணங்­கின.

1863: மெக்­ஸிகோ தலை­ந­க­ரான மெக்­ஸிகோ சிட்டி, பிரெஞ்சுப் படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்­டது.

1905: சுவீ­ட­னுடன் இணைந்த ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு நோர்வே நாடா­ளு­மன்றம் அங்­கீ­கா­ர­ம­ளித்­தது.

1940: 2ஆம் உலக யுத்­தத்­தின்­போது நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்­கோனும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஒலாவும் நாட்­டை­விட்டு வெளி­யேறி லண்­டனில் வசிக்க ஆரம்­பித்­தனர்.

1975: ஆண்­க­ளுக்­கான முத­லா­வது உல­கக்­கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி இங்­கி­லாந்தில் ஆரம்­ப­மா­கி­யது. முதல் போட்­டியில் இந்­தி­யாவை இங்­கி­லாந்து 202 ஓட்­டங்­களால் வென்­றது.

1977: பிரித்­தா­னிய அரசி இரண்டாம் எலி­ஸ­பெத்தின் பொன்­விழா கொண்­டாட்­டத்தின் முக்­கிய நிகழ்வு நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வு­களை தொலைக்­காட்­சியில் சுமார் 50 கோடி பேர் பார்­வை­யிட்­டனர்.

1989: சூரினாம் எயார்வேஸ் விமா­ன­மொன்று சூரி­னாமில் விபத்­துக்­குள்­ளா­னதால் 176 பேர் பலியாயினர்.

1995: போயிங் 777 பய­ணிகள் விமானம் முதல் தட­வை­யாக சேவைக்கு வந்­தது.

2000: இஸ்­ரே­லுக்கும் லெப­னா­னுக்கும் இடை­யி­லான எல்­லை­களை ஐ.நா. வரை­யறை செய்­தது.

2006: ஈராக்கில் அல் கைதா தலை­வ­ரான அபு முசாப் அல் ஸார்­காவி, அமெ­ரிக்க விமா­னப்­ப­டை­யி­னரின் தாக்­கு­தலில் பலி­யானார்.

2007: கொழும்பு விடு­தி­களில் தங்­கி­யி­ருந்த வடக்கு கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த 370 இற்கும் அதி­க­மான தமி­ழர்கள் வலுக் கட்­டா­ய­மாக பொலி­ஸாரால் வெளி­யேற்­றப்­பட்டு யாழ்ப்­பாணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

2013: சீனாவின் ஸியாமென் நகரில் பஸ் ஒன்று தீப்பற்றியதால் 47 பேர் உயிரிழந்தனர்.

2014: கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 37 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!