மோடி–இம்ரான் கான் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்த செய்திக்கு இந்தியா மறுப்பு

No meeting planned between Narandra Modi and Imran Khan at regionalsummit-Inndia foreign ministry

0 134

இந்தியா–பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையே அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெளியான செய்திக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது. 

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் சந்திக்கவிருப்பதாக வெளியான செய்தியை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் மறுத்துள்ளார்.

நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஜூன் 13–14 திகதிகளில் இடம்பெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!