தின்பண்டத்திலிருந்த ‘அதிஷ்ட’ இலக்கங்களால் லொத்தரில் 344.6 மில்லியன் டொலர்களை வென்ற நபர்

Charles Jackson wins $344M jackpot after playing fortune cookie numbers

0 422

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், தின்பண்டமொன்றின் உள்ளேயிருந்த அதிஷ்டக் குறிப்பிலிருந்த இலக்கங்களைப் பயன்படுத்தியதன் மூலம், லொத்தர் சீட்டிழுப்பில் 344.6 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 6,086 கோடி இலங்கை ரூபா, 23868 கோடி இந்திய ரூபா) ஜக்பொட் பரிசை வென்றுள்ளார்.

வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த, 66 வயதான சார்ள்ஸ் ஜக்சன் என்பவரே இப்பெருந்தொகை பரிசை வென்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர் தனது பரிசை பெற்றுக்கொண்டார்.  இது குறித்து சார்ள்ஸ் ஜக்சன் பேசுகையில், போர்சூன் குக்கி எனும் தின்பண்டத்துக்குள் இருந்த இலக்கங்களையே இந்த லொத்தரில் தான் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

போர்சூன் குக்கீ (fortune cookie) என்பது, பிஸ்கெட் போன்ற ஒரு தின்பண்டமாகும். இதற்குள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய கடதாசித் துண்டில் வாழ்த்துக்கள் மற்றும் அதிஷ்ட இலக்கங்கள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

 தென்கிழக்காசிய நாடுகளில் பிரசித்தி பெற்ற போர்சூன் குக்கீஸ் பின்னர் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளிலும் அறிமுகமானது.

இந்நிலையில் தானும் தனது மனைவியும் தமது பேத்தியுடன் வியட்நாமிய உணவகமொன்றுக்கு சென்றபோது. உட்கொண்ட போர்சூன் குக்கியிலிருந்த அதிஷ்ட இலக்கங்கள் கொண்ட கடதாசித் துண்டை தனது பேத்தி தனக்கு வழங்கியதாக சார்ள்ஸ் ஜக்சன் தெரிவித்துள்ளார்.

8 வயதான அப்பேத்தி வழங்கிய கடதாசியிலிருந்த இலக்கங்களை லொத்தர் சீட்டில் தான் பயன்படுத்தியதாகவும் சார்ள்ஸ் ஜக்சன் தெரிவித்துள்ளார்.

மேற்படி லொத்தர் சீட்டுக்கு 344.6 மில்லியன் (34.46 கோடி) டொலர் அதாவது (சுமார் 6,086 கோடி இலங்கை ரூபா, 23868 கோடி இந்திய ரூபா) பரிசு கிடைத்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!