மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு வீதிப் போக்குவரத்துக்களில் மாற்றங்கள்

0 401

(ஆர்.விதுஷா)

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வுள்ளார். அதனை முன்னிட்டு விசேட வாகனப்போக்குவரத்து நாடாளுமன்றகட்டடத்தொகுதி வரையில் வாகன சாரதிகள் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதம, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ள 11 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதி, பேலியகொடை மேம்பாலம், ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடசந்தி, பொரளை சந்தி மற்றும் கனத்தை சுற்றுவட்டப்பாதையூடாக பேஸ்லையின் பாதை வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி பொரளை டீ.எஸ்சேனாநாயக்க சந்தி, கோடன் பிரதேசம் , தாமரைத்தடாக சுற்றுவட்ட பாதை, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை , நூலக சுற்றுவட்டப்பாதை, தர்மபால மாவத்தை ,பித்தளை சந்தி, சென்ற் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, குமரன் ரத்னம் வீதி , சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை , யோர்க் வீதி, பரோன் ஜயதிலக மாவத்தை , ரெக்லமேஷன் பாதை , லோட்டஸ் பாதை, வங்கி மாவத்தை , ஜனாதிபதி மாவத்தை , காலி வீதி வரையும் காலிமுகத்திடல் தொடக்கம் பழைய நாடாளுமன்றம் வரையிலான வீதி வரை வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

அதனை தொடர்ந்து 1 .45 இற்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி மாவத்தை, வங்கி மாவத்தை, யோர்க் வீதி வீதி, சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, குமரன் ரத்னம் வீதி, சென்ற் ஜேம்ஸ் பீரிஸ்மாவத்தை , ஃபிளவர் வீதி , தர்ஸ்டன் பாதை தும்முல்ல வரை யிலான வீதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

மேலும் , 2.30 இற்கும் 3.30 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தர்மபாலமாவத்தை , ஆனந்த குமாரசுவாமி மாவத்தை , தாமரைத்தடாக சுற்றுவட்டபாதை , ஹோர்ட்டன் பிரதேசம் , டீ.எஸ் .சேனாநாயக்க சந்தி பொரளை, தெமட்டகொடை, ஒருகொடவத்தை ஊடாக கொழும்பிலிருந்து அதிவேக வீதி வரை வாகனப்போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த காலப்பகுதியி;ல் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதி ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய காலி வீதியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் தும்முல்ல சந்தி ஊடாக , பொரளை மயான சுற்றுவட்டப்பாதையிலிருந்து பாராளுமன்ற வீதி , பத்தரமுல்லை , கடுவெல , பியகம ஊடாக கண்டி வீதியை அடைய முடியும் .

அத்துடன், காலி மற்றும் மாத்தறையிலிருந்து வருகைதரும் வாகனங்கள் அதிவேக வீதி ஊடாக கடவத்தை நோக்கி பயணித்து தேவையான பகுதிகளுக்கு செல்ல இயலும் . இவ்வாறாக மத்திய மற்றும் வட கொழும்பு பிரதேசங்கள் ஊடாக விமான நிலையத்திற்கோ அல்லது கண்டி வீதியூடாக புதிய விக்டோரியா பாலத்தினூடாகவோ அல்லது கதிரான பாலத்தின் ஊடாக பயணிக்ககூடியதாகவிருக்கும்.

மேலும் . இந்த காலப்பகுதியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் விமான நிலையத்தை அடைவதற்கு இவ்வாறாக மாற்று வழிகளை உபயோகித்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!