மாலைதீவிலிருந்து இன்று இலங்கை வருகிறார் மோடி

Indian Prime Minister Narendra Modi is to visit Sri Lanka today

0 676

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். முற்பகல் 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்..

இரண்டாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் நேற்று சனிக்கிழமை மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டார். மாலைதீவினால் அவர் “நிஷான் இஸுதீன் ஆட்சி  (Rule of Nishan Izzuddeen) எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மாலைதீவினால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருது இதுவாகும்.

மாலைதீவிலிருந்து நேரடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில மணித்தியாலங்கள் மாத்திரமே அவர் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் 3 ஆவது விஜயமாகும். இதற்குமுன் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வீதிப் போக்குவரத்துத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!