மாலைதீவு ஜனாதிபதிக்கு இந்திய அணியினர் கையெழுத்திட்ட துடுப்பு வழங்கினார் மோடி

Modi gifts Maldives President Solih cricket bat signed by Indian cricket team

0 802

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் துடுப்பு ஒன்றை மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ்வுக்கு வழங்கினார்.

எனது நண்பர் இப்ராஹிம் சோலிஹ், தீவிர கிரிக்கெட் ரசிகர். அதனால், 2019 உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் இந்திய அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் துடுப்பை அவருக்கு வழங்கினேன்’ என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் நேற்று சனிக்கிழமை மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

மாலைதீவு அரசாங்கத்தினால் அவர் நிஷான் இஸுதீன் ஆட்சி  (Rule of Nishan Izzuddeen) எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மாலைதீவினால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருது இதுவாகும்.

மாலைதீவிலிருந்து நேரடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!