பிரிட்டனிலிருந்து ரோமுக்கு காரில் செல்ல முயன்றவர் தவறுதலாக ஜேர்மனிய கிராமத்தை சென்றடைந்தார்; Sat Nav சாதனத்தில் தவறான பதிவினால் விபரீதம்

0 647

பிரிட்­டனைச் சேர்ந்த முதி­யவர் ஒருவர், பிரிட்­ட­னி­லி­ருந்து இத்­தா­லியின் ரோம் நக­ருக்கு காரில் செல்ல முயற்­சித்­த­போது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக ஜேர்­ம­னிய கிராமமொன்றைச் சென்­ற­டைந்­துள்ளார்.

81 வய­தான லூஜி ரிமொன்ரி எனும் இம்­மு­தி­யவர் இத்­தா­லியைச் சேர்ந்­தவர், ஆனால், 1965 ஆம் ஆண்­டி­லி­ருந்து பிரிட்­டனில் வசிக்­கிறார்.

இவர் வத்­தி­க்கா­னுக்குச் சென்று பாப்­ப­ரசர் முதலாம் பிரான்­சிஸை சந்­தித்து ஆசி பெற விரும்­பினார். பல தட­வைகள் அவர் இத்­தா­லிக்கு விமா­னத்தில் சென்று திரும்­பி­யுள்ளார்.

ஆனால், பாப்­ப­ர­சரை சந்­திப்­ப­தற்கு, விமா­னத்தில் பயணம் செய்­யாமல் தனது காரி­லேயே பிரிட்­ட­னி­லி­ருந்து ரோம் (Rome நக­ருக்குச் செல்­வ­தற்கு அவர் தீர்­மா­னித்தார்.

இப்­ப­ய­ணத்­துக்கு வச­தி­யாக செய்­மதி வழி­காட்­டி­யுடன் இயங்கும் சற் நேவ் (Sat Nav) எனும் சற்­றலைட் நேவி­கேஷன் சாத­னத்தை அவர் பயன்­ப­டுத்­தினார்.

பிரிட்­டனின் நியூ­காசல் நக­ரி­லி­ருந்து அவரின் கார் பயணம் ஆரம்­ப­மா­கி­யது. சுமார் 1,100 கிலோ­மீற்றர் தூரம் அவர் காரை செலுத்திச் சென்ற நிலையில், ஒரு கிராமப் பகு­தி­யொன்றில் வைத்து பயணம் முடிந்­து­விட்­ட­தாக சற் நேவ் சாதனம் தெரி­வித்­தது.

அவர் உண்­மையில் இத்­தா­லியின் ரோம் நகரை சென்­ற­டை­ய­வில்லை. மாறாக ஜேர்­ம­னியின் ரொம் (Rom) எனும் சிறிய கிரா­மத்தை சென்­ற­டைந்­தி­ருந்தார். இக்­கி­ரா­ம­மா­னது இத்­தா­லியின் ரோம் நக­ரி­லி­ருந்து 1000 கிலோ­மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருந்­தது.ரோம் நகரின் புரா­தன அல்­லது நவீன கட்­டங்கள் எதையும் காணாத நிலையில் பயணம் முடிந்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டதை உணர்ந்து லூஜி வியப்­ப­டைந்தார்.

தான் இருக்கும் இடம் எது என்­பதை அறி­வ­தற்­காக காரி­லி­ருந்து லூஜி வெளியே இறங்­கினார். ஆனால், அவர் ஹேண்ட் பிறேக்கை அழுத்த மறந்­து­விட்­டதால், அக்கார் பின்­னோக்கி நகர்ந்­தது. இறு­தியில் என எழு­தப்­பட்ட வீதிப் பெயர் பல­கை­கை­யொன்றில் அக்கார் மோதி நின்­றமை வியப்­பா­னது.

இச்­சம்­ப­வத்தில் காரை நிறுத்த முயன்ற லூஜியை திறந்த கதவு தாக்­கி­யதால் அவ­ருக்கு சிறிய காயம் ஏற்­பட்­டது. மருத்­துவ சோத­னைக்­காக அவர் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்டார். எரி­பொருள் நிரப்பு நிலை­ய­மொன்றின் ஊழி­யர்­க­ளிடம் சற் நேவ் சாத­னத்தில் ரோம் நகரை தெரிவு செய்து தரு­மாறு தான் கோரி­ய­தா­கவும், ஆனால், அதில் ரோம் நகர் சரி­யாக தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை எனவம் லூஜி தெரிவித்தார்.

இத்­தா­லியின் ரோம் (Rome) நக­ரா­னது இத்­தா­லிய மொழipயில் ரோமா (Roma) எனவும் ஜேர்­ம­னிய மொழியில் Rom எனவும் எழு­தப்­ப­டு­வதும் மேற்­படி குழப்­பத்­துக்கு கார­ண­மாக இருக்­கலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!