வட்ஸ் அப் செயலியிலுள்ள கோளாறை தீர்த்த இளைஞனுக்கு 500 டொலர் பரிசு வழங்கிய பேஸ்புக்

0 342

வட்ஸ்அப் சமூக வலைத்­தள செய­லி­யிலுள்ள கோளாறு ஒன்றை சுட்­டி­க­காட்டி அதற்கு தீர்­வொன்­றையும் கூறிய 19 வய­தான இந்­திய இளைஞர் ஒரு­வரை பேஸ்புக் நிறு­வனம் பாராட்­டி­ய­துடன் 500 டொலர் பணப்­ப­ரி­சையும் வழங்­கி­யுள்­ளது.

கேரள மாநி­லத்தின் ஆலப்­புழா நகரைச் சேர்ந்த கே.எஸ். அனந்­த­கி­ருஷ்ணா எனும் இளை­ஞ­ருக்கே இப்­ப­ரிசு கிடைத்­துள்­ளது.

இவர் கேர­ளாவின் பத்­த­னம்­திட்டா மாவட்­டத்­தி­லுள்ள மவுன்ட் ஸியோன் பொறி­யியல் கல்­லூ­ரியின் பி.டெக் பட்­டப்­ப­டிப்பை பயின்று வரு­கிறார்.

இரு மாதங்­க­ளுக்கு முன்னர், வட்ஸ்அப் செய­லியில் (அப்) பாவை­ன­யா­ளர்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே பைல்கள் அழிக்­கப்­படும் தவறை அனந்­த­கி­ருஷ்ணன் கண்­டு­பி­டித்தார்.

இது தொடர்­பாக, பேஸ்புக் நிறு­வ­னத்­துக்கு அவர் அறி­வித்­துடன் சாத்­தி­ய­மா­கக்­கூ­டிய தீர்­வையும் தெரி­வித்தார்.வட்ஸ்அப் செய­லி­யா­னது பேஸ்புக் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மாக உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பேஸ்புக் நிறு­வனம் இரு மாதங்­க­ளாக இவ்­வி­ட­யத்தை ஆராய்ந்த பின்னர், கே.எஸ். அனந்­த­கி­ருஷ்­ணனை கௌர­விப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தது. இதன்­படி அவ­ருக்கு 500 அமெ­ரிக்க டொலர் (சுமார் 88,000 இலங்கை ரூபா) பணப்­ப­ரிசை வழங்கியதுடன், பேஸ்புக்கின் புகழ்பூத்தவர்கள் பட்டியலிலும் (ஹால் ஒவ் ஃபேம்) சேர்க்கவுள்ளதகா அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!