21 வயதில் 196 நாடு­க­ளுக்குச் சென்று சாதனை படைத்த யுவதி

0 399

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், உலகில் இறை­மை­யுள்ள 196 நாடு­க­ளுக்குப் பயணம் செய்த மிக இள­மை­யா­னவர் என்ற சாத­னையைப் படைத்­துள்ளார்.

லெக்ஸி அல்­பரட் என்­ப­வரே இந்த யுவ­தி­யாவார். லெக்­ஸி­யியன் பெற்றோர் பயண முக­வர்­க­ளாக தொழில்­பு­ரிந்­த­வர்கள். இதனால், மிக இளம் வய­தி­லேயே பல நாடு­க­ளுக்குப் பயணம் செய்ய அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­தது.

பின்னர் தனது சொந்த முயற்­சி­யி­லேயே அவர் மேலும் பல நாடு­க­ளுக்குச் செல்ல ஆரம்­பித்தார். இறு­தி­யாக கடந்த மே 31 ஆம் திகதி வட­கொ­ரி­யா­வுக்கு லெக்ஸி சென்றார். அது அவர் பயணம் செய்த 196 ஆவது நாடாகும்.

இதற்­குமுன் பிரிட்­டனைச் சேர்ந்த ஜேம்ஸ் அஸ்குய்த் என்­பவர் 2013 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் இச்­சா­த­னையைப் புரிந்­தி­ருந்தார். ஆரம்­பத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கம் அவ­ருக்கு இருக்­க­வில்­லையாம்.

 

யேமனில்

 

ஆனால், 2016 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் 72 நாடு­க­ளுக்குச் சென்­றி­ருந்த நிலையில், உலகச் சுற்­று­லாவில் சாதனை படைக்கும் எண்ணம் ஏற்பட்டது என லெக்ஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!