இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்

Indian Prime Minister Narendra Modi arrives in Sri Lanka

0 606

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 

மாலைதீவு விஜயத்தின் பின்னர் அவர் மாலைதீவிலிருந்து நேரடியாக அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் மாத்திரமே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் தங்கியிருப்பார்

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த பாரிய குண்டுத் தாக்குதல்களில் 258 பேர் கொல்லப்பட்ட பின்னர், இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் 3 ஆவது விஜயமாகும். இதற்குமுன் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வீதிப் போக்குவரத்துத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!