‘கன்னித் தீவு பெர்ஸ்ட் லுக்’

0 157

கதாநாயகி, வில்லி, குணசித்ரம் என எந்த ரோலாக இருந்தாலும் தனக்கு பிடித்தமாக இருந்தால் ஏற்று நடிப்பவர் நடிகை வரலட்சுமி. தற்போது கதையின் நாயகியாக, ‘வெல்வட் நகரம்’, ‘காட்டரி’, ‘சேஸிங்’, ‘கன்னித்தீவு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘சேஸிங்’ படத்தில் சண்டைக் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஸ்டன்ட் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார் வரலட்சுமி.இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘கன்னித் தீவு’ படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்­பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

வரலட்சுமியுடன் ஆஷ்னா சாவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக் ஷா போன்ற நடிகைகளும் முக்கிய கெரக்டர்களில் நடிக்கிறார்கள். சுந்தர் பாலு இயக்கி உள்ளார். தண்ணீருக்குள் நான்கு கதாநாயகிகளும் இருக்க, முதலை ஒன்று இவர்களை கடிக்க வருவது போன்று இந்த போஸ்டர் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!