நிறத்தில் அழகு இல்லை- ரோஷினி

0 616

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் நடிகையின் பெயர் ரோஷினி. இவர் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான்.

மொத்தத்தில் இவர் சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த இவர் தன் நிறத்தால் சந்தித்த வேதனை சாதனைகளை சொல்கிறார் ரோஷினி.

பள்ளியில் படிக்கும்போதே தனது நிறம், தலைமுடி பற்றி கலாய்த்த­வர்கள், ஏளன­மாக பேசியவர்கள் அதிகம்.

என்னவோ எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. நம்ம அழகு இல்லைன்னு மனசு வருத்தமா இருக்கும். அதோட அந்த வருத்தம் முடிஞ்சு போச்சு. அதிகமாக கல்லூரி நாட்களில் அவமானப்பட்டு இருக்கேன்.

என் தலை முடி கூட என் பேச்சு கேட்காத மாதிரி முரட்டுத் தனமா இருக்கும். அதையும் வச்சு கலாய்ப்பார்கள்.

ஒரு நாள் என்னை நானே கண்ணாடியில் பார்த்து…நாம அவ்ளோ அசிங்கமாவா இருக்கோம்னு யோசிச்சேன் என்னோட கண்கள் இவ்ளோ அழகா இருக்கான்னு அப்போதுதான் யோசிச்சேன்.

என்னையே நான் அழகுன்னு கண்ணாடியில் பார்த்து சொல்லிக்குவேன்.உண்மை­யில் என் கண்கள் அழகாத்தான் இருந்துச்சு. அதுக்கு அழகா மை வச்சு எடுப்பா இருக்கற மாதிரி செய்தேன்.

தோழிகள் எல்லாம் உன் கண்ணு இவ்ளோ அழகா இருக்­குடி. இப்படியே உன்னை நீ அழகு படுத்திக்கோ. நிஜமா நீ அழகுதான்னு தோழிகள் ஊக்கு­விச்சாங்க.

சருமத்தின் நிறத்தை மாத்த முடியாது. ஆனா, இதே நிறத்தை நல்லா மிளிர செய்ய முடியும்னு சருமத்துக்கு ஆரோக்­கி­யமான உணவுகளை சாப்பிட ஆரம்பிச்சேன்.

படிச்சு முடிச்சு நல்ல கம்­பெனி­யில வேலை பார்த்தேன். அது எனக்கு ஒத்து வரலை.

நானே ஹேண்ட் மேட் ஜ்வெல்லரி செய்து, ஒன் லைன் மூலமா அதை விற்பனை செய்து வந்தேன்.

என்னோட ஜ்வெல்லரிக்கு நானே ெமாடலாகவும் இருந்து போட்டோ நானே எடுத்து போட்டுக்குவேன்.

ஹேண்ட் மேட் நகைகள் அவ்வளவா விற்பனை ஆகி என் வாழ்க்கை மேல் தரத்­துக்கு உயரும்ன்னு எனக்கு தோணலை.

நான் மொடலாக இருந்ததில் நானும் சினிமாவில், சீரியல்களில் நடிக்க முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. ஆடிஷ­னுக்கு போவேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்தாலும் கவலைப்பட மாட்டேன். சினிமா ஆடிஷனில் நிறத்­தைப் பார்த்து ஒதுக்குவது இன்னும் அதிகமாத்தான் இருக்கு. கறுப்பு, வெள்ளை காலப் படங்களில்கூட அப்படி இருந்ததில்லை என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.

என்னோட மொடல் போட்டோவைப் பார்த்துத்தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது.நான் சொல்ல வேண்டிய கருத்துக்­களை இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதை சொல்லுது. இது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

என்னை பொறுத்த வரைக்கும், சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே எல்லாப் பெண்களும் அழகுதான். நிறத்தில் அழகு இல்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!