நடப்பு உலக சம்பியன் பிரான்ஸை வென்று அதிர்ச்சியளித்தது துருக்கி

Turkey stun world champions France in Euro 2020 qualifiers

0 571

கால்பந்தாட்ட உலக கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணியை, யூரோ 2020 தகுதிகாண் போட்டியொன்றில், துருக்கி அணி 2-0 கோல்கள் விகிதத்தில் வென்று அதிர்ச்சியளித்தது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன.

துருக்கியின் கோன்யோ நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போட்டியொன்றில் நடப்பு உலக சம்பியனான பிரான்ஸும் துருக்கியும் மோதின.

இப்போட்டியில் துருக்கி அணி 2-0 கோல்களால் வென்றது. போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அஹ்யான் முதல் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்திழல் சென்கிஸ் அண்டர் இரண்டாவது கோலை அடித்தார்.

ரஷ்யா 9:0 கோல்களால் வெற்றி

இதேவேளை நேற்று ஏனைய யூரோ2020 தகுதிகாண் போட்டிகளில் சான் மரினோ அணியை 9-0 கோல்களால் ரஷ்யா வென்றது. சோவியத் ஒன்றிய காலத்தின் பின்னர் ரஷ்ய அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

கஸகஸ்தான் அணியை பெல்ஜியம் 3-0 கோல்களால் வென்றது.
வேல்ஸ் அணியை குரோஷியா 2-1 கோல்களால் வென்றது.
அண்டோராவை மோல்டோவா 1-0 விகிதத்தில் வென்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!