வரலாற்றில் இன்று ஜூன் 10 : 1786 சீனாவில் அணைக்கட்டு உடைந்ததால் ஒரு லட்சம் பேர் பலி

0 261

1786: சீனாவில் சிச்­சுவான் மாகா­ணத்தில் மண்­ச­ரி­வினால் அணைக்­கட்­டொன்று உடைந்­ததால் சுமார் 100,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1829: இங்­கி­லாந்தின் புகழ்­பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு இடையில் வரு­டாந்த பட­கோட்டப் போட்டி ஆரம்­ப­மா­கி­யது.

1886: நியூஸிலாந்தின் தர­வேரா எரி­மலை வெடித்­ததால் 153 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1898: அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் கியூபாவில் தரை­யி­றங்­கினர்.

1916: ஒட்­டோமான் ராஜ்­ஜி­யத்­துக்கு எதி­ராக அரே­பி­யர்­களின் கிளர்ச்சி ஆரம்பமா­கி­யது.

1935: பொலி­வியா, பர­குவே நாடு­க­ளுக்­கி­டையில் 3 வரு­ட­மாக நடை­பெற்ற யுத்தம் முடி­வுற்­றது.

1940: ஜேர்­ம­னி­யிடம் நோர்வே சர­ண­டைந்­தது.

1940: பிரிட்டன் மற்றும் பிரான்­ஸுக்கு எதி­ராக இத்­தாலி யுத்தப் பிர­க­டனம் செய்­தது.

1944: பிரான்ஸின் கிரா­ம­மொன்றில் ஜேர்மன் படை­யி­னரால் 642 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1967: இஸ்­ரேலும் சிரி­யாவும் போர் நிறுத்­தத்­துக்கு இணங்­கி­யதால் 6 நாள் யுத்தம் முடி­வுக்கு வந்­தது.

1980: ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தலைவர் நெல்சன் மண்­டேலா போராட்­டத்­துக்­கான அழைப்பை சிறை­யி­லி­ருந்து விடுத்­துள்­ள­தாக தென் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் அறி­வித்­தது.

1990: ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான ஐ.தே.க. அர­சாங்­கத்­துக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்­தது. 2 ஆவது ஈழ யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1996: வட அயர்­லாந்தில் சமா­தான பேச்­சுவார்;த்தை ஆரம்­ப­மா­கி­யது.

1999: கொசோ­வோ­வி­லி­ருந்து சேர்­பிய படை­களை வாபஸ் பெறு­வ­தற்கு ஸ்லோபோடன் மிலோ­சவிக் இணங்­கி­யதால் வான்­வழி தாக்­கு­தல்­களை நேட்டோ இடை­நி­றுத்­தி­யது.

2001: லெப­னானின் முதல் பெண் புனி­த­ரான புனித ரப்­காவை பாப்­ப­ரசர் 2 ஆம் அரு­ளப்பர் சின்­னப்பர் திரு­நி­லைப்­ப­டுத்­தினார்.

2002: இரு மனி­தர்­க­ளுக்­கி­டை­யி­லான முதலாவது நேரடி இலத்திரனியல் பரிமாற்ற சோதனை பிரிட்டனில் கெவின் வோர்விக் என்பவரால் நடத்தப்பட்டது.

2003: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான நாசாவின் ஸ்பிரிட் விண்கலம் ஏவப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!