எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு: ஐ.நா. சமாதானப் படை உதவியுடன் மீண்டும் லெபனானுக்குத் திரும்பியது

0 600

லெபனானிலிருந்து எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, சுமார் ஒரு வாரத்தின் பின்னர், ஐ.நா. சமாதானப் படையினரின் உதவியுடன் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் சென்றடைந்துள்ளது.

லெபனானில் உள்ள கன்னியாஸ்திரியான பியட்றிஸ் மவ்கர் இந்தக் குரங்கை வளர்த்து வந்தார்.  இக்குரங்கு கடந்த மாத இறுதியில் தனது கூட்டிலிருந்து வெளியேறிச் சென்றது. இக்குரங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு மேற்படி கன்னியாஸ்திரி முயற்சித்தார்.

ஆனால், அது உலகின் மிக பதற்றமான எல்லையொன்றான, லெபனான், இஸ்ரேல் எல்லையைக் கடந்து இஸ்ரேலிய பிராந்தியத்துக்குள் நுழைந்தது.

இக்குரங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக பேஸ்புக்கிலும் ஒரு வேண்டுகோளை வெளியிட்டார் கன்னியாஸ்திரி பியட்றிஸ். பின்னர் இஸ்ரேலியக் குழுவொன்றினால் இக்குரங்கு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த குறித்த குரங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. சமாதானப் படையினரின் உதவியுடன் மீண்டும் லெபானானுக்கு கொண்டுவரப்பட்டு கன்னியாஸ்திரி பியட்றிஸ் மவ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!