பிரெஞ்சு பகிரங்க மகளிர் பிரிவில் புதிய சம்பியன் ஏஷ்லி பார்ட்டி

Australia's Ashleigh Barty beat Marketa Vondrousova to win French Open Title

0 407

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லி பார்ட்டி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

பாரிஸின் ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் 19 வயதான மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை இரண்டு நேர் செட்களில் வெற்றிகொண்டு ஏஷ்லி பார்ட்டி சம்பினானார்.

தனது மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) வாழ்க்கையில் ஏஷ்லி பார்ட்டி வெற்றிகொண்டு முதலாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

பிரெஞ்சு மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அண்மைக் காலங்களில் இரண்டு புதிய வீராங்கனைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி கிட்டத்தட்ட ஒரு பக்க சார்பான ஏஷ்லி பார்ட்டி ஆதிக்கம் செலுத்திய போட்டியாக அமைந்தது.

போட்டியின் முதலாவது செட்டில் 6 க்கு 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற ஏஷ்லி பார்ட்டி, இரண்டாவது செட்டில் சிறு சவாலுக்கு மத்தியில் 6 க்கு 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியன் ஆனார்.

மேலும் பிரெஞ்சு பகிரங்க மகளிர் டென்னிஸ் இறுதி ஆட்ட வரலாற்றில் 2007இல் சேர்பியாவின் அனா இவானோவிச்சுக்குப் பின்னர் பருவ மங்கை ஒருவர் (மார்க்கெட்டா) இறுதிப் போட்டியில் விளையாடியது இதுவே முதல் தடவையாகும்.

போட்டியின் தோல்வி அடைந்த பின்னர் சோகமே உருவாக கண்ணிர் சிந்திய மார்க்கெட்டா, பரிசளிப்பு மேடையில் தோன்றியபோது புன்முறுவலை அடக்க முடியாதவறாக இன்முகத்துடன் காணப்பட்டார்.

இந்த இறுதிப் போட்டியில் புதிய இருவர் விளையாடியதன் மூலம் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!