ஜேசன் ரோயின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி: ஷக்கிப் அல் ஹசனின் நிதானமான சதம் வீண்போனது

0 74

 கார்டிவ் வேல்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தின் 12ஆவது லீக் போட்­டியில் இங்­கி­லாந்து குவித்த கணி­ச­மான மொத்த ஓட்­டங்­களை பங்­க­ளாதேஷ் கிஞ்­சித்தும் எட்­ட­மு­டி­யா­த­வாறு ஆங்­கி­லேய பந்­து­வீச்­சா­ளர்க்ள அசுர வேகத்தில் பந்­து­வீச இங்­கி­லாந்து 106 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது.

ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் அதி­ர­டி­யாக 153 ஓட்­டங்களை விளாசித் தள்ள சர்வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இங்­கி­லாந்து சாத­னை­மிகு ஆறா­வது தட­வை­யாக 300 ஓட்­டங்­களைப் கடந்­தது. அப் போட்­டியில் 6 விக்­கெட்­களை இழந்து இங்­கி­லாந்து பெற்ற 386 ஓட்­டங்கள் உலகக் கிண்ண வராற்றில் அவ்­வணி பெற்ற அதி­கூ­டிய மொத்த எண்­ணிக்­கை­யாகும். அத்­துடன் இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் சனிக்­கி­ழ­மை­ வரை அணி ஒன்று பெற்ற அதி­கூ­டிய மொத்த எண்­ணிக்­கை­யா­கவும் அது அமைந்­தது.

அதன் பின்னர் ஜொவ்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகி­யோரின் வேகப்­பந்­து­வீச்­சுக்­களை எதிர்­கொள்­வதில் பங்­க­ளாதேஷ் பெரும் சிர­மத்தை எதிர்­கொண்­ட­துடன் இங்­கி­லாந்­தினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 387 ஓட்­டங்கள் பங்­க­ளாதேஷ் அணிக்கு எப்­போதும் எட்­டாக்­க­னி­யா­கவே இருந்­தது.

சக­ல­துறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி அபார சதம் குவித்தார். உலகக் கிண்ணப் போட்­டியில் இம்­முறை அவர் 50 ஓட்­டங்­க­ளுக்கும் மேல் பெற்ற  மூன்­றா­வது நேரடி சந்­தர்ப்­ப­மாகும். ஆனால்,வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளான ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்­கெட்­களை வீழ்த்த இங்­கி­லாந்தின் ஆதிக்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் பிச­க­வில்லை.

துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு கார்டிவ் ஆடு­களம் சாதகமாக அமையும் என கூறப்­ப­டு­கின்­ற­போ­திலும் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­­க­ளாதேஷ் அணித் தலைவர் மஷ்­ராபே மோர்ட்­டாஸா களத்­த­டுப்பில் ஈடு­பட எடுத்த தீர்­மானம் அவ்­வ­ணிக்கு பாதிப்பை தோற்­று­வித்­து­விட்­டது.

அப் போட்­டியில் இங்­கி­லாந்து சார்­பாக ஒரு சதம், ஒரு இரண்டு அரைச் சதங்கள் பெ­றப்­பட்­ட­துடன் மொத்­த­மாக 24 சிக்­சர்­களும் 27 பவுண்ட்­றி­களும் விளா­சப்­பட்­டன. அதா­வது இங்­கி­லாந்தின் மொத்த எண்­ணிக்­கையில் 252 ஓட்­டங்கள் பவுண்ட்­றிகன், சிக்­சர்கள் மூலம் வந்­து­கு­விந்­தன.

அத்­துடன் இங்­கி­லாந்து துடுப்­பாட்ட வீரர்கள் விக்­கெட்­க­ளுக்கு இடையில் அசுர வேகத்தில் ஓடி­ய­மையும் அதன் மொத்த எண்­ணிக்­கைக்கு பேரு­த­வி­யாக அமைந்­தது. மேலும் ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோ ஆரம்­ப­விக்­கெட்டில் 128 ஓட்­டங்­களைப் பகிர்ந்­த­மையும் இங்­கி­லாந்­துக்கு சிறந்த ஆரம்­ப­மாக அமைந்­தது.

பங்­க­ளா­தேஷை வெற்­றி­கொண்­டதன் மூலம் இவ் வருட உலகக் கிண்ணப் போட்­டியில் மூன்று போட்­டி­களில் மூன்­றா­வது நேரடி வெற்­றியை ஈட்­டிய இங்­கி­லாந்து இப்­போ­தைக்கு முதலாம் இட்த்தில் இரு­கின்­றது.

எண்­ணிக்கை சுருக்கம்

இங்­கி­லாந்து 50 ஓவர்­களில் 386 – 6 விக். (ஜேசன் ரோய் 153, ஜொஸ் பட்லர் 64. ஜொனி பெயார்ஸ்டோ 51, ஒய்ன் மோர்கன் 35, மெஹிதி ஹசன் மிராஸ் 67 – 2 விக்.)

பங்களாதேஷ் 48.5 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 280 (ஷக்கிப் அல் ஹசன் 121, முஷ்பிக்குர் ரஹிம் 44, பென் ஸ்டோக்ஸ் 23 – 3 விக்.,  ஜொவ்ரா ஆச்சர் 29 – 3 விக்.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!