அவுஸ்திரேலியாவை 36 ஓட்டங்களால் வென்றது இந்தியா

India beat Australia by 36 runs

0 689

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இந்திய அணி .36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அவ்வணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களைக் குவித்து.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிக்கர் தவான் 109 பந்துகளில் 16 பவுண்டறிகள் உட்பட 117 ஓட்டங்களைக் குவித்தார். மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 70 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆணித் தலைவர் விராத் கோஹ்லி 77 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பெற்றார். பாண்டியா 27 பந்துகளில் 48 ஓட்டங்களையும் எம்.எஸ்.தோனி 14 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர். லோகேஷ் ராகுல் 3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
.

ஸ்டீவன் ஸ்மித் 70 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் வோர்ணர் 84 பந்துகளில் 56 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெறி 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் புவனேஷ் குமார் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பும்ரா 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!