தென் ஆபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

0 338

இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் நடை­பெற்­று­வரும் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் அணிகள் நிலையில் பின்­னி­லையில் இருக்கும் தென் ஆபி­ரிக்­காவும் மாறு­பா­டான பெறு­பே­று­க­ளுடன் விளை­யா­டிவரும் மேற்­கிந்­தியத் தீவு­களும் சௌத்­ஹம்ப்­டனில் இன்று நடை­பெ­ற­வுள்ள 15ஆவது லீக் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் ஒன்­றை­யொன்று சந்­திக்­க­வுள்­ளன.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யாயம் ஆரம்­பித்து ஒன்­றரை வாரங்கள் கடந்த நிலையில் மூன்று போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக தோல்­வி­களைத் தழு­வி­வந்­துள்ள தென் ஆபி­ரிக்கா முத­லா­வது வெற்­றியை சுவைக்கும் எண்­ணத்­துடன் சௌத்­ஹாம்ப்டன் ஹெம்ப்­ஷயர் போல் விளை­யாட்­ட­ரங்­குக்கு பய­ண­மா­கி­யுள்­ளது.

உபாதை கார­ண­மாக டேல் ஸ்டேனை இழந்­துள்ள தென் ஆபி­ரிக்க அணியில் லுங்கி நிகிடி இடம்­பெ­று­வதும் சந்­தே­கத்­துக்கு இட­மா­கி­யுள்­ளது. அத்­துடன் துடுப்­பாட்­டமும் பிர­கா­சிக்­காத நிலையில் மூன்று நேரடி தோல்­வி­க­ளுடன் தென் ஆபி­ரிக்கா, 2019 உலகக் கிண்ணப் போட்­டியில் நிலைத்­தி­ருக்­குமா என்ற சந்­தேகம் எழத் தொடங்­கி­யுள்­ளது.

நிகிடி விளை­யா­டு­வது சந்­தே­கத்­துக்கு இட­மான நிலையில் டேல் ஸ்டேனுக்குப் பதி­லாக குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள போரான் ஹெண்ட்­றிக்ஸை இறுதி அணியில் இணைப்­ப­தற்கு தென் ஆபி­ரிக்க அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் முன்­வ­ருவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான போட்­டியில் மத்­தி­யஸ்­தர்­களின் தவ­றான தீர்ப்­பு­களால் தோல்வி அடைய நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட மேற்­கிந்­தியத் தீவுகள் இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற முடியும் என்ற நம்­பிக்­கை­யுடன் களம் இறங்­க­வுள்­ளது.

இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் 1992இலி­ருந்து இது­வரை 61 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன. அவற்றில் 44–15 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருப்­ப­துடன் ஒரு போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்­துள்­ள­துடன் ஒரு போட்­டியில் முடிவு கிட்­ட­வில்லை.

உலகக் கிண்­ணத்தில் ஆறு போட்­டி­களில் 4 – 2 என தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

ஆனால் இந்த முடி­வுளை வைத்து இன்­றைய போட்டி முடிவை அனு­மா­னிப்­பது இல­கு­வா­ன­தல்ல. மேலும் சௌத்­ஹாம்ப்­டனில் இன்று அவ்­வப்­போது மழை பெய்­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் பெரி­ய­ளவில் பாதிப்பு ஏற்­படும் என அனு­மா­னிக்­கப்­ப­ட­வில்லை

.
குழாம்கள்:

தென் ஆபி­ரிக்கா: பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), ஏய்டன் மார்க்ராம். குவின்டன் டி கொக்,ஹஷிம் அம்லா, ரெசி வெண் டர் டுசென், டேவிட் மில்லர், க்றிஸ் மொறிஸ், அண்டைல் பெலுக்­வாயோ, ஜே.பி. டுமினி, ட்வெய்ன் ப்ரிட்­டோ­ரியஸ், போரான் ஹெண்ட்றிக்ஸ்,கெகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, இம்ராம் தாஹிர், தப்ரெய்ஸ், ஷம்சி.

மேற்­கிந்­தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), பேபியன் அலென், டெரன் ப்ராவோ, ஷெனன் கேப்றியல், ஷிம்ரன் ஹெட்மியர், எவின் லூயிஸ், நிக்கலஸ் பூரான், அண்ட்ரே ரசல், கார்லோஸ் ப்றத்வெய்ட், ஷெல்டன் கொட்ரெல், க்றிஸ் கேல், ஷாய் ஹோப், ஏஷ்லி நேர்ஸ், கெமர் ரோச், ஓஷேன் தோமஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!