கிரேசி மோகன் காலமானார்

Crazy Mohan passed away

0 346

எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் (66) மாரடைப்பு காரணமாக, சென்னையில் இன்று (10) காலமானார்

 ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்திவந்தார்.

அத்துடன் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் வசனம் எழுதி வந்தார். 30 நாடகங்கள், 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

 இவரின் படைப்பான சாக்லேட் கிருஷ்ணா, நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளது.சினிமாவில் காலடி : இயக்குனர் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம், சினிமாவில் வசனகர்த்தாவாக கிரேசி மோகன் அறிமுகம் ஆனார்

.நடிகர் கமல்ஹாசனுடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார். இவரது கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்திருந்து.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!