விமானத்தின் கழிவறைக் கதவு என எண்ணி அவசரக்கால கதவை திறந்துவிட்ட பெண் பாகிஸ்தான் விமானத்தில் சம்பவம்

0 1,361

பாகிஸ்­தானின் பய­ணிகள் விமா­ன­மொன்றின் அவ­சர கால கதவை பெண்­ணொ­ருவர் எதிர்­பா­ராத வித­மாக திறந்­து­விட்­டதால் அவ்­வி­மா­னத்தின் பயணம் சுமார் 7 மணித்­தி­யா­லங்கள் பாதிக்­கப்­பட்­டது.

இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் நகர விமான நிலை­யத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.
பாகிஸ்­தானின் தேசிய விமான சேவை­யான, பாகிஸ்­தான் இன்­டர்­நெ­ஷனல் எயார்லைன்ஸ் (பி.ஐ.ஏ) நிறு­வ­னத்தின் பிளைட் பி.கே. 702 எனும் விமானம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை மன்­செஸ்டர் நக­ரி­லி­ருந்து பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மா­பாத்­துக்கு புறப்­படத் தயா­ரா­க­வி­ருந்­தது.

அப்­போது. பய­ணி­யான பெண்­ணொ­ருவர், கழி­வ­றைக்குச் செல்ல முற்­பட்டார். அப்பெண் கழி­வ­றைக்­க­தவு என எண்ணி, விமா­னத்தின் அவ­சர கால கதவை திறந்­து­விட்டார்.
இதனால், அவ­ச­ர­வே­ளை­களில் விமா­னத்­தி­லி­ருப்­ப­வர்­களை இறக்­கு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் கதவு திறந்­து­கொண்­ட­துடன், ஸ்லைட் எனும் சறுக்கல் வழியும் செயற்­படத் தொடங்­கி­யது.

போயிங் 777-340 ரகத்தைச் சேர்ந்த அவ்­வி­மானம் சோத­னை­களின் பின்னர் பறக்க அனு­ம­திக்­கப்­பட்­டது. எனினும், அவ­ச­ர­கால கதவை மீண்டும் அவ­ச­ர­நிலை ஏற்­பட்டால் அக்­க­தவை செயற்­பட வைக்க முடி­யா­தென்­பதால் பய­ணி­களின் எண்­ணிக்­கையை குறைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இதனால், விமா­னத்­தி­லி­ருந்த 21 பய­ணிகள் அதே விமா­னத்தின் வேறு ஆச­னங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டனர். மேலும் 37 பய­ணிகள் தமது பொதி­க­ளுடன் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். 
சுமார் 7 மணித்தியால தாமதத்தின் பின்னர் அவ்விமானம் மன்செஸ்டரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டது. இச்­சம்­பவம் குறித்து தான் கவ­லை­ய­டை­வ­தாக பி.ஐ.ஏ. நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறு­கையில்,” பய­ணிகள் அனை­வ­ருக்கும் இரவு உணவு வழங்­கப்­பட்­டது. விமா­னத்­தி­லி­ருந்து இறக்­கப்­பட்ட பய­ணிகள் அனை­வரும் ஹோட்­ட­லொன்றில் தங்க வைக்­கப்­பட்­ட­துடன், ஹோட்­ட­லுக்குச் செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து வச­தி­களும் வழங்கப்பட்டன’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!