குருணாகலில் 3 வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசம்: விசாரணை முன்னெடுப்பு

0 1,569

குருணாகல் கடுபொத்த நகரில் நேற்றிரவு (10)   மூன்று வர்த்தக நிலையங்கள்  தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் மின் ஒழுக்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தீப் பரவல் காரணமாக கடுபொத்த நகரிலிருந்த 3 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்குச் சென்ற குருணாகல் நகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் பொதுமக்களுடன் இணைந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு மின் ஒழுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடடுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!