இலங்கை, பங்களாதேஷ் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

Sri Lanka vs Bangladesh world Cup match abandoned

0 291

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இங்கிலாந்தின் ப்றிஸ்டல் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவிருந்த உலகக் கிண்ண கிரிக்கெட் 16ஆவது லீக் போட்டி கடும் மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப் படாமல் கைவிடப்பட்டது.

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இதே விளையாட்டரங்கில் மழை காரணமாக வைிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டதால் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இதுவரை நான்கு போட்டிகளில் ஒரு தோல்வியைத் தழுவியதுடன் ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டதால் இதுவரை 5 புள்ளிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. ஆனால் இது இலங்­கைக்கு ஆரோக்­கி­ய­மா­னது எனக் கரு­த­மு­டி­யாது.

சௌத்­ஹம்ப்­டனில் நேற்­று­ம நடை­பெற்ற மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான போட்டி 7.3 ஓவர்­க­ளுடன் கடும் மழை கார­ண­மாக கைவி­டப்­பட்­ட­போது 2 விக்­கெட்­களை இழந்து 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!