பரிசுக்கான காசோலையைத் தவறவிட்டனே தவிர  உலகக் கிண்ணத்தை கைவிடவில்லை : அர்ஜூன ரணதுங்க

0 1,146

1996 உலகக் கிண்ணத் சுவீகரித்த பின்னர் மக்களுடன் இடிபட்டதால் இடறி விழுந்த வேளையில் பரிசுச் தொகைக்கான காசோலையையே தவறவிட்ட போதிலும் உலக கிண்ணத்தை கைவிடவில்லை என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

‘‘அவஸ்திரேலியாவை வெற்றிகொண்டு உலக சம்பியனானதுடன் வெற்றிமேடையில் வைத்து வெற்றிக் கிண்ணமும் காசோலையும் எனக்கு வழங்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் என்னை மக்கள்  சூழ்ந்துகொண்டதால் நான் தவறி வீழ்ந்தேன். நான் கீழே வீழ்ந்தபோது காசோலையைத் தவறவிட்டபோதிலும் கிண்ணத்தை பற்றிப் பிடித்துக்கொண்டுதான் இருந்தேன்’’ என அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.

‘‘எனது நினைவின் பிரகாரம், 1996இல் பணப்பரிசாக எமக்கு 30,000 டொலர்கள் கிடைத்தது. அப்போது ஒரு டொலரின் பெறுமதி 70 ரூபா அல்லது 80 ரூபாவாக இருந்திருக்கும். அந்தப் பரிசுக்தொகையை நாங்கள் 14 பேரும் பகிர்ந்துகொண்டோம்.

பணத்தைப் பற்றி நாங்கள் பெரிதாக எண்ணவில்லை. உலகக் கிண்ணத்தை வென்றதைத்தான் பெறுமதியாக எண்ணினோம். அதற்கு உதாரணமாகத் தான் காசோலையைத் தவறவிட்டேனே தவிர உலகக் கிண்ணத்தை அல்ல எனக் குறிப்பிட்டேன்’’ என அர்ஜு கூறியுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!