பன்றி இறைச்சி விற்பனைக்கு 3 கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு!

0 1,192

                                                                                                                                      (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
.
பலாங்கொடை நகரில் பன்றி இறைச்சிக் கடை ஒன்றைத் திறப்பது தொடர்பில் இன்று (11) கொண்டு வரப்பட்ட பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் பலாங்கொடை நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சுனேத்ரா வீரசிங்க, பலாங்கொடை நகரில் பன்றி இறைச்சி விற்பனை செய்வதற்கான கடை ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 பேர் வாக்களித்தனர். எதிரான 4 வாக்குகள் மட்டுமே அளிக்கபட்டன. இதனையடுத்து குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!