காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்த ஸஹ்ரான்: அவரது நகரமாகவே அது இருந்தது-அசாத் சாலி

0 804

(ஆர்.யசி )

“காத்­தான்­கு­டியில் ஸஹ்ரான் ஆட்­சியே இடம்­பெற்­றது, ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்­திக்­கொண்டு வன்­முறை ரீதி­யி­லான அடிப்­ப­டை­வாத கொள்­கை­யையே அவர்கள் கையாண்­டனர். ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சில­ருடன் அர­சியல் உடன்­ப­டிக்­கை­களும் செய்து கடந்த தேர்­தலில் பிரச்­சாரம் செய்தார் எனவும் கோட்­டா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கும் தெளஹீத் ஜமாஅத் அமைப்­பிற்கும் இடையில் நெருங்­கிய தொடர்­புகள் இருந்­தன” என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வாக்­கு­மூலம் வழங்­கினார்.

அப்துல் ராசிக் என்ற நபர் இன்­னமும் வெளியில் பொலிஸ் பாது­காப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது எனவும் குறிப்­பிட்டார். 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்­குதல் குறித்து உண்­மை­களை கண்­ட­றிந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளுக்­காக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ருடன் நடத்­திய விசா­ர­ணை­களின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ரணை,

கேள்வி:- நீங்கள் குறித்த தாக்­குதல் குறித்து தெரிந்­தி­ருந்­த­தாக கூறி­னீர்கள், இது குறித்து அறி­யத்­தர முடி­யுமா?
பதில்:- இந்த நாட்டில் அர­சாங்கம் இருக்­கின்­றதா, ஜனா­தி­பதி ஒருவர் உள்­ளாரா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இன்று இவ்­வா­றான ஒரு சம்­பவம் இடம்­பெற கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து இன்­று­வரை ஆட்­சி­செய்த அர­சாங்கம் பொறுப்­புக்­கூற வேண்டும். இந்த கால­கட்­டத்தில் ஐந்து பாது­கப்பு செய­லா­ளர்கள் கட­மையில் இருந்­தனர். இவர்கள் ஐந்து பேரி­டமும் நாம் எழுத்து மூலமும், சந்­தித்தும் அறிக்­கை­யிட்டோம். நான் தனி­யா­கவும், ஜம்­மிய்­யத்துல் உலமா, சிவில் அமைப்­புகள் சேர்ந்தும் இவர்­க­ளுக்கு முறைப்­பாடு செய்தோம்.

கேள்வி:- ஐந்து பாது­காப்பு செய­லா­ளர்கள் என்றால் எந்த காலத்தில் இருந்து?
பதில்:- கோட்­டா­பய ராஜ­பக்ஷ பத­வி­யி­லி­ருந்த காலத்தில் இருந்து. 2010 ஆம் ஆண்டில் இருந்து. அந்த ஆண்டு தான் முஸ்லிம் மக்கள் நெருக்­க­டிக்கு தள்­ளப்­பட்ட காலம்.

கேள்வி:- முதலில் எப்­போது?
பதில் :- முஸ்லிம் பள்­ளிகள் தாக்­கப்­பட்டு மக்கள் அடிக்­கப்­பட்ட காலத்தில்

கேள்வி:- யாரால் தாக்­கப்­பட்ட நேரம்?
பதில்:- அதை கோட்­டா­பய ராஜபக் ஷவிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- இல்லை, யார் மூலம் எந்த பள்ளி தாக்­கப்­பட்­டது?
பதில்:- சிங்­கள பெளத்த பிக்­குகள் சிலரின் தலை­மைத்­து­வத்தில் சிங்­கள காடை­யர்­களின் மூல­மாக தானே தாக்­கப்­பட்டோம். அப்­போது அர­சாங்கம் இதனை வேடிக்கை பார்த்­ததே தவிர நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லையே. நாம் இவர்­களை சந்­தித்து பெயர் பட்­டி­யல்கள் பல கொடுத்தோம். சிங்­கள அடிப்­படை­வாதம் மட்­டு­மல்ல முஸ்லிம் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்தும் ஆதா­ரத்­துடன் தெரி­வித்தோம்.

கேள்வி:- நீங்கள் ஒரு தக­வலை வெளிப்­ப­டுத்தும் வேளையில் காலம், சம்­பவம் என ஆதா­ரத்­துடன் கூறுங்கள். முதலில் சிங்­கள அடிப்­ப­டை­வாதம் பற்றி கூறி­னீர்கள். ஆகவே அதி­லி­ருந்து கூறுங்கள்?
பதில்: -சரி, அளுத்­கம சம்­பவம் நடக்கும் போது ராஜித சேனா­ரத்­­ன­விடம் தொடர்ச்­சி­யாக கூறினேன். அது மட்டும் அல்ல அளுத்­கம பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்தேன். இந்த கூட்­டத்தை நடத்த இட­ம­ளிக்க வேண்டாம்.

இது இடம்­பெற்றால் தீ வைக்­கப்­படும். அவ்­வாறு நடந்தால் மகிந்த ராஜபக் ஷ, கோட்­டா­பய ராஜபக் ஷ மற்றும் பொலிஸ்மா அதி­பரே பொறுப்­புக்­கூற வேண்டும் என்ற முறைப்­பாட்டை செய்தேன். அதற்­கான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. ஆனால் அந்த கூட்­டத்தில் தான் “அப சரணாய்” என்ற வார்த்தை பிர­யோ­கிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் அவர்­க­ளுக்கு வீடு­களை கட்டிக் கொடுப்­பதில் அனைத்தும் சரி­யா­கி­வி­டாது.

இரா­ணுவம் சென்று வீடு­க­ளுக்கு வெள்­ளை­ய­டித்து கொடுத்து காயத்தை போக்­கி­விட முடி­யாது. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் இது குறித்து ஆணைக்­குழு அமைப்­ப­தாக கூறினர். இன்­று­வரை ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வில்லை. இந்த தாக்­குதல் தான் ஆரம்பம். அடித்தால் கேட்க யாரும் இல்லை, அர­சாங்கம் ஒன்றும் செய்­யாது என்ற நிலைப்­பாடு பர­வி­யது. அதன் பின்னர் திகன, காலி, மினு­வாங்­கொடை என பர­வி­யது.

21 ஆம் திகதி தாக்­குதல் நடத்த முன்னர் பிர­புக்கள் பாது­காப்பு கடிதம் ஒன்று வந்­தது. எனது பாது­கா­வலர் கடிதம் ஒன்­றினை கொடுத்தார். அதில் பல பெயர்கள் இருந்­தன. அந்த பெயர்கள் தான் நாம் ஆரம்­பத்தில் கொடுத்த பெயர்கள்.

அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்­டோ­விடம் இது குறித்து அறி­வித்து பேச வேண்டும் என கூறிய போது அவர் தனி­யாக வர­வில்லை பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் தான் வந்து எம்மை சந்­தித்தார்.

கேள்வி:- ஆரம்­பத்தில் இருந்து நீங்கள் செய்த முறைப்­பா­டுகள் குறித்து தெளி­வாக கூறுங்கள், காலம், ஆதாரம் என்ற அடிப்­ப­டையில் கூறுங்கள்.
பதில்:- காலம் இப்­போது இல்லை, என்­னிடம் உள்ள அனைத்து ஆதா­ரங்­க­ளையும் தரு­கிறேன். புகைப்­ப­டங்கள், அறிக்­கைகள் என அனைத்­துமே உள்­ளன. கடந்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் இதனை குறிப்­பிட்டேன். அது­மட்டும் அல்ல 2017 ஆம் ஆண்டு ஸஹ்ரான் காத்­தான்­கு­டியில் 120 வீடு­க­ளுக்கு தீ வைத்தார்.

இது குறித்து பொலிஸில் முறைப்­பாடு செய்தும் பொலிஸாரால் எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. முடி­யாத கட்­டத்தில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்டம் செய்­தனர். அப்­போதும் பொலிஸார் வேடிக்கை தான் பார்த்­தனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து தெளஹீத் ஜமாஅத் அமைப்பும் பொலி­ஸாரும் ஒன்­றா­கவே செயற்­பட்­டனர். இவை குறித்து நான் பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­வித்தேன்.

ஸஹ்­ரானை சுதந்­தி­ர­மாக நட­மாட விட்­டனர். அது­மட்டும் அல்ல, சம்­பவம் நடக்க ஒரு வாரத்­துக்கு முன்னர் ஜனா­தி­பதி மட்­ட­க­ளப்பு நிகழ்வு ஒன்­றுக்கு வந்தார். அப்­போதும் பொலிஸ்மா அதி­பரும் இருந்தார். அப்­போதும் ஸஹ்ரான் குறித்து கேள்வி எழுப்­பினேன். ஏன் கைது­செய்­ய­வில்லை என வின­வினேன். ஆனால் அதற்­கான உருப்­ப­டி­யான பதில் வர­வில்லை. மாவ­னெல்­லையில் சில செயற்­பா­டுகள் உள்­ளன. ஏழு பேர் ஜும்மா நடத்­து­வ­தாக கூறு­கின்­றனர்.

குறைந்­தது நாற்­பது பேர் இல்­லாது ஜும்மா நடத்­தப்­ப­டாது. இதை­யெல்லாம் நான் சுட்­டிக்­காட்­டினேன். அது­மட்டும் அல்ல தெளஹீத் ஜமாஅத் அமைப்­பிற்கு வந்த பணம் குறித்­தெல்லாம் தெரி­யப்­ப­டுத்­தினேன். ஆனால் ஒரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தெளஹீத் ஜமாஅத் முஸ்லிம் நடை­மு­றைக்கு எதி­ராக செயற்­பட்டு வந்­தனர். அவர்கள் ஒரு அடை­யாளம் இல்­லாது செயற்­பட்­டனர்.

அப்துல் ராசிக் என்ற நபர் குறித்து ஏன் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாது உள்­ளது. அவர் பக்­தாதி குறித்து கருத்­துக்­களை பரப்­பு­கின்றார். நியா­யப்­ப­டுத்­து­கின்றார். என்னை கைது­செய்ய முடியும் என்றால் அப்துல் ராசிக் ஏன் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. அவரை கைது­செய்ய ஆதாரம் இல்லை என பொலிஸ்மா அதிபர் கூறு­கின்றார்.

அப்­ப­டி­யென்றால் இவரை ஏன் பொலிஸ்மா அதிபர் காப்­பாற்­று­கின்றார். ஆனால் அதற்கும் கதை வைத்­துள்­ளனர். இவர்தான் உள­வுத்­து­றையிள் உள்ளார் என்ற கார­ணத்தை கூறு­கின்­றனர் தானே. பக்­தா­தியை நியா­யப்­ப­டுத்தும் ஒருவர் தீவி­ர­வாதி இல்­லையா? இவரை பாது­காக்க மேலி­டத்தில் உத­விகள் உள்­ளன என்­பது தெரி­கின்­றது தானே.

கேள்வி:- நீங்கள் ஆளு­ந­ராக இருந்த காலத்தில் எத்­தனை தட­வைகள் வெளிப்­ப­டுத்­தி­னீர்கள்?
பதில்:- ஜனா­தி­ப­திக்கு மூன்று தட­வைகள் கூறினேன், பாது­காப்பு செய­லா­ள­ருக்கு பல தட­வைகள் கூறினேன். சிசிர மென்டிஸ் ஏனைய அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் இது தெரியும். சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் பூஜித ஜய­சுந்­த­ரவை தொடர்­பு­கொண்டு கேட்டேன், நான் கூறி­யது சரி­தானே என கேட்டேன்

கேள்வி:- அவ­ரது பதில் எவ்­வாறு இருந்­தது?
பதில்:- அவர் ஒன்றும் கூற­வில்லை. ராசிக் கூறிய விட­யங்கள் என்­னிடம் உள்­ளன. அவர் பக்­தா­தியை நியா­யப்­ப­டுத்­து­கின்றார். அது மட்டும் அல்ல இந்த அமைப்பின் தலைவர் பி.ஜே. செய்­னு­லாப்தீன் என்­பவர் தமிழ் நாட்டில் உள்ளார். இவர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆட்­சிக்­கா­லத்தில் இலங்­கைக்கு வந்தார்.

இரண்டாம் தடவை வந்து ரண்­முத்து ஹோட்­டலில் இருந்த காலத்தில் நானும் அலவி மௌலா­னவும் இவ­ரது செயற்­பா­டு­களை கண்­டித்து இவரை நாட்டை விட்டு வெளி­யே­ற்றினோம். இது 1995 ஆம் ஆண்டு நடந்­தது. அதன் பின்னர் நான்கு தட­வைகள் இவர் இலங்­கைக்கு வரு­வதை நானே தடுத்தேன்.

இவர் நாட்­டுக்கு வந்தால் நாடு தீ பிடிக்கும். இதனை நான் அறிந்­து­கொண்டேன். இவர் குர்ஆன் ஒன்றை தமிழில் மொழி­பெ­யர்த்­துக்­கொண்டார். இதன் சிங்­கள பிர­தியை தான் மஹிந்த ராஜபக் ஷ, கோட்­டா­பய ராஜபக் ஷ, உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச ஆகி­யோ­ருக்கு கொடுத்தார். இவர்­களின் தொடர்­பு­களை கவ­னித்­துக்­கொள்­ளுங்கள்.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் நாட்­டுக்கு வரு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுத்தார். பிர­சா­ரத்­துக்கு வர­வில்லை மருத்­துவ தேவைக்­காக வரு­வ­தாக கூறினார். ஆனால் நாம் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. இவர்­கள்தான் இங்கு அடிப்­ப­டை­வா­தத்தை பரப்பி நாட்­டினை நாச­மாக்­கிய நபர்கள்.

காத்­தான்­கு­டியில் இவர்­களை பிடிக்க சென்ற வேளையில் கூட மில்­லியன் கணக்­கி­லான பணத்தை வழங்கி தம்மை காட்­டிக்­கொ­டுக்க வேண்டாம் என்றே அவர்கள் தெரி­வித்­தனர்.

கேள்வி:- அப்துல் ராசிக் என்­பவர் ஸஹ்­ரானின் கீழ் செயற்­பட்­ட­வரா?
பதில்:- தெளஹீத் ஜமா அத் என்று ஒன்­றா­கவே இவர்கள் ஆரம்­பித்­தனர். பின்னர் இவர்­க­ளுக்கு வந்த பணத்தை பங்­கிட முடி­யாது இவர்கள் பிள­வு­பட்டு இன்று எட்டு -பத்து அமைப்­பு­க­ளாக மாற்றம் பெற்­றுள்­ளனர்.

இதுதான் உண்­மை­யாக நடந்­தது. இவர்­களின் பள்­ளி­களில் பத்து பேர் இருக்க மாட்­டார்கள். இவர்­க­ளுக்கு மக்கள் ஆத­ரவு இல்லை. அப்துல் ராசிக் எஸ்.எல்.டி.ஜே வில் இருந்து பிள­வு­பட்டு சி.டி.ஜே ஆக மாற்றம் பெற்­றுள்­ளது. இவர்கள் தான் பல கார­ணி­க­ளுக்கு காரணம்.

கேள்வி:- இவர்கள் தீவி­ர­வாத அமைப்பு இல்­லையே. வன்­முறை அமைப்பு இல்லை தானே?
பதில்:- இவர்கள் பிரச்­சா­ரங்கள் மூல­மாக வன்­மு­றையை தூண்டும் நபர்கள். அடிப்­ப­டை­வா­தத்தை நியா­யப்­ப­டுத்தும் காணொ­ளிகள் தான் இவர்­களின் இணைய பக்­கங்­களில் பிர­சு­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

என்.டி.ஜே இப்­போது வெளி­வந்த பெயர் தானே. இவர்கள் வன்­மு­றையை கையாண்­ட­தாக இது­வரை பதி­வா­க­வில்லை பிர­சா­ரங்கள் மூல­மாக வன்­மு­றையை தூண்­டு­கின்­றனர்.

கேள்வி:-முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு முறைப்­பாடு செய்­த­தாக கூறி­னீர்கள். எப்­போதில் இருந்து?
பதில்:- அமைச்சு உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் இருந்து கூறினேன். பிர­த­மரை நேர­டி­யாக சந்­தித்து முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஹலீமை மாற்­றுங்கள் என, நல்ல அமைச்சர் ஒரு­வரை நிய­மி­யுங்கள் என கூறினேன்.

நூறு நாட்கள் அர­சாங்கம் முடிந்­த­வுடன் இவரை மாற்­று­வ­தாக கூறினார். உண்­மையில் இவ­ரது தம்பி தான் இந்த அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் மூல காரணம். தெளஹீத் ஜமாஅத் இந்த நிலை­மைக்கு உரு­வாக அவரே காரணம்.

கேள்வி:- அசாத் சாலி அவர்­களே நீங்கள் முன்­வைப்­பது பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு?
பதில்:- ஆம் அது தெரியும். அதனால் தான் நான் குற்றம் சுமத்­து­கிறேன். நான் பல தட­வைகள் கூறி­யுள்ளேன்.

கேள்வி:- அவர் பெயர் என்ன?
பதில்:- அமைச்சர் ஹலீமின் தம்பி பாஹிம்.

கேள்வி:- தம்பி பயங்­க­ர­வாதி என்­ப­தற்­காக அண்ணன் பொறுப்­பேற்க வேண்­டுமா?
பதில்:- பயங்­க­ர­வாதி என கூற­வில்லை, இவர்தான் தெளஹீத் ஜமாஅத் அமைப்பை பதி­வு­செய்து இயங்க நட­வ­டிக்கை எடுத்தார். அண்ணன் அப்­பாவி ஒருவர் தான்.

கேள்வி:- நீங்கள் பாது­காப்பு செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது 2013-14 ஆம் ஆண்­டு­கால சம்­ப­வங்கள் குறித்தா பேசி­னீர்கள்?
பதில்:- இல்லை தெளஹீத் ஜமா அத் தொடர்பில்.

கேள்வி:- நான் கேட்­பது என்­ன­வென்றால் கடந்த கால முறைப்­பா­டுகள் குறித்து என்ன நடந்­தது?
பதில்:- அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை, முறைப்­பாடு செய்தும் பல­னில்லை. தெளஹீத் ஜமா­அத்தும் பொலி­சாரும் ஒன்­றாக செயற்­பட்­டனர். என்ன முறைப்­பாடு செய்தும் எம்மால் ஒன்­றுமே செய்ய முடி­யாது போய்­விட்­டது.

கேள்வி:- காத்­தான்­குடி பொலி­ஸாரால் பிடி­யாணை ஒன்று பிறப்­பிக்­கப்­பட்­டது ஸஹ்ரான் தேடப்­பட்டு வந்தார் தானே?
பதில்:- அவர்கள் தான் ஒன்றும் செய்­ய­வில்­லையே, ஸஹ்­ரானை பிடிக்க நட­வ­டிக்கை எடுத்த பொலிஸ் அதி­கா­ரியை இடம்­மாற்றம் செய்­தனர் தானே. அதன் பின்னர் மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­யவும் தானே சில சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அது­மட்­டு­மல்ல ஐ.எஸ் கோடியை வைத்­துக்­கொண்டு ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். அப்­பி­ர­தேச மக்­களை வெட்­டிப்­போட்­டனர். ஆரம்­பத்தில் இருந்து நாம் தெரி­வித்தோம். ஸஹ்ரான் எங்­கி­ருந்து செயற்­பட்டார், அவ­ருக்கு எவ்­வாறு பணம் வந்­தது என்ற கார­ணிகள் கண்­கா­ணிக்­கப்­பட்­டி­ருந்தால் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­காது.

கேள்வி:- ஸஹ்ரான் போன்று வேறு யாரும் உள்­ள­னரா?
பதில்:- ஆம் உள்­ளனர். அவற்றை கூற எமக்கு வேறு இடம் இல்லை. ஆனால் இப்­போது இந்த இடத்தில் என்னால் கூற முடி­யாது.
தெரி­வுக்­குழு:- இங்கு கூற வேண்டாம். தேசிய பாது­காப்பு விட­யங்கள் குறித்து தனி­யாக எம்­மிடம் கூறுங்கள். ஊட­கங்கள் முன்­னி­லையில் கூற வேண்டாம்.

கேள்வி:- 2014 ஆம் ஆண்டில் தான் ஸஹ்ரான் குறித்து முதலில் தகவல் வந்­தது. இது குறித்து பல அறிக்­கைகள் உள்­ளன. அப்­போ­து­வரை எமது புல­னாய்வு துறை­மூலம் பணம் வழங்­கிய 26 நபர்­களில் ஸஹ்­ரானும் ஒருவர் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யுமா?
பதில்:- அப்­போது அவ­ரது பெயரை அறிந்­தி­ருக்க வில்லை. எஸ்.எல்.டி.ஜே மற்றும் ராசிக் என்ற நப­ருக்கு பணம் கொடுக்­கப்­பட்­டது என்­பது தெரியும்.

தெரி­வுக்­குழு:- இல்லை அப்­போது இது குறித்து தகவல் வந்­தது, இணை­ய­தளம் ஒன்றில் இது பிர­சு­ரிக்­கப்­பட்­டது. உடனே பாது­காப்பு செய­லாளர் குறித்த இணை­ய­தள உரி­மை­யா­ளரை திட்டி இந்த செய்­தியை நீக்க வலி­யு­றுத்­தினார். இதில் ஸஹ்­ரானும் இருந்தார். அது­மட்டும் அல்ல சிங்­கள பெளத்த அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களும் இருந்­தன.

இது தான் காத்­தான்­கு­டியும் பொலி­ஸாரும் அவ­ருக்கு எதி­ராக ஒன்றும் செய்ய முடி­யாது போன­மைக்கு கார­ண­மாகும். அது­மட்டும் அல்ல ஆரம்­பத்தில் இருந்து இவ­ருக்கு எதி­ராக முஸ்லிம் மக்­களே எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர். சிங்­க­ள­வர்கள் அல்ல. எமது பாது­காப்பு செய­லா­ளரும், அதி­கா­ரி­களும் தெரிந்தோ தெரி­யா­மலோ இவர்­களை பாது­காத்­தனர்.

அசாத் சாலி: -ஆம், அது­மட்டும் அல்ல காத்­தான்­கு­டியில் ஐ.எஸ் கொடி­யுடன் இவர்கள் ஊர்­வலம் சென்­ற­போது எங்கே போனது எமது புல­னாய்வு பிரிவும், பொலிஸும். இவற்றை ஏன் தடுக்­க­வில்லை.

கேள்வி:- இவ்­வாறு ஊர்­வலம் போகையில் அதனை தடுக்க பொலி­ஸா­ருக்கு முடி­யாமல் போன­மைக்கு பின்­னுந்­துதல் இருக்கும் என நினைக்­கி­றீர்­களா?
பதில்:- இன்று அப்துல் ராசிக்கை கைது­செய்ய வேண்டாம் என எவ­ரேனும் கூறு­கின்­றனர் என்றால் அவர்கள் தான் அன்றும் ஸஹ்­ரானை பாது­காத்­தனர் என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

கேள்வி:- யார் அது?
பதில்:- நீங்கள் தான் இதனை தேட­வேண்டும்.

கேள்வி:- நீங்கள் இந்த கார­ணி­களை உறு­தி­யாக கூறு­கின்­றீர்கள் என்றால் அதனை தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் கூறுங்கள், நீங்கள் அரச அதி­காரி அல்ல, நீங்கள் சுதந்­தி­ர­மாக உங்­களின் கருத்­துக்­களை கூற வேண்டும்,
பதில்:- இல்லை. நீங்கள் கேட்கும் கேள்­விக்கு மட்டும் தானே பதில் கூற வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றீர்கள். என்னை எங்கே பேச விடு­கி­றீர்கள்.

கேள்வி:- இல்லை, கேள்­விக்கு தொடர்­பான பதிலை நீங்கள் கூறலாம். ஒரு முறைப்­படி கூறுங்கள், அப்­போ­துதான் எமக்கும் அறிக்­கையை உரு­வாக்க முடியும். ஆகவே தெளி­வாக கூறுங்கள். சரி ராசிக் என்­பவர் குறித்து கூறப்­ப­டு­கின்­றது அவர் எங்கே இருக்­கிறார் என்று தெரி­யுமா?
பதில்:- இருக்­கிறார் தானே

கேள்வி:- இருக்­கின்றார் என்று எங்­க­ளுக்கும் தெரியும். உல­கத்தில் எங்­கேயோ இருக்­கிறார், எங்கு இருக்­கிறார் என்று தெரி­யுமா என்­றுதான் கேட்­கிறோம்?
பதில்:- பொலி­ஸுடன் தான் இருக்­கின்றார். கொழும்பில் பொலி­ஸுடன் தான் உள்ளார்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் அவர் இருப்­பது தெரிந்தும் பிடிக்­காமல் உள்­ளனர் என்றார் நீங்கள் கூறு­கின்­றீர்கள்?
பதில்:- அதை தானே நான் இவ்­வ­ளவு நேர­மாக கூறு­கிறேன். நான் பதவி விலக மூன்று நாட்­க­ளுக்கு முன்­னரும் ஜனா­தி­ப­திக்கு இது குறித்து தெரி­வித்தேன்.

அப்­போது அவர்­க­ளுக்குள் என்­னமோ பேசிக்­கொண்­டனர். அத்­துடன் முடிந்­து­விட்­டது. அவர்­க­ளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறு­கின்­றனர். நான் கேட்­பது என்­ன­வென்றால் நான் கொடுத்த ஆதா­ரங்கள் உண்­மையில் போதாதா அவரை கைது­செய்ய? “பக்­தா­தியின் செயற்­பா­டுகள் நியா­ய­மா­னது, அவர்தான் சரி­யான தலைவர், அவரை பார்க்கும் போதே உடல் புல்­ல­ரிக்­கின்­றது” என்று கூறு­கின்றார் என்றால் அத­னை­விட வேறு என்ன ஆதாரம் தேவைப்­ப­டு­கின்­றது?

கேள்வி:- ஏனைய மதத்­த­வரை கொலை செய்ய வேண்டும் என ராசிக் கூறு­கின்­றாரா?
பதில்:- எனக்கு கிடைத்த வீடியோ பதிவில் அவை இல்லை. “பக்­தாதி சிறந்த தலைவர், அவர் செய்­வது சரி” என்று கூறு­கின்றார் என்றால் பயங்­க­ர­வாதம் சரி என்று கூறு­வ­தாக தானே அர்த்­தப்­படும்.

என்னை ஏன் கைது செய்­தனர், எதிர்­வு­கூ­றிய கார­ணத்­தினால் தானே என்னை கைது செய்­தனர். அமைச்­சர்­க­ளுக்கு கூட என்னை பார்க்க முடி­யாத நிலைமை இருந்­தது. கடு­மை­யான சட்­டத்தில் என்னை சிறையில் அடைத்­தனர். இவ்­வ­ளவு ஆதாரம் இருக்கும் ஒரு­வரை ஏன் கைது­செய்ய முடி­ய­வில்லை.

கேள்வி:- உங்­களை எப்­போது கைது செய்­தனர்?
பதில்:- என்னை கோட்டாபய ராஜ­பக் ஷ செய­லாளர் காலத்தில் தானே கைது செய்­தனர். 2013ஆம் ஆண்டு.

கேள்வி:- அந்த காலத்தில் ஸஹ்ரன் குறித்து தெரி­விக்­கப்­பட்­டதா?
பதில்:- அவர் தானே அதி­க­மாக ஸஹ்­ரானை பயன்­ப­டுத்­தினார். அவ­ரது வழி­ந­டத்­தலில் தானே இவர்கள் அனை­வரும் இயங்­கினர்.

கேள்வி:- அவர் என்றால் யாரை கூறு­கின்­றீர்கள்?
பதில்:- கோட்­டா­பய ராஜ­பக் ஷ எஸ்.எல்.ரி ஜேவுடன் நெருக்­க­மாக செயற்­பட்டார். சாலே என்ற இரா­ணுவ அதி­காரி மிகவும் நெருக்­க­மாக செயற்­பட்டார். அவர்தான் என்னை கைது செய்து அமைச்­சர்கள் கூட பார்க்க முடி­யாத நிலையில் புல­னாய்வு அதி­கா­ரிகள் என்னை சந்­தித்­தனர். ஏன் என்னை சந்­தித்­தனர்? 500 மில்­லியன் ரூபாவை எனக்கு பேரம்­பேச வந்­தனர் . இதை­யெல்லாம் கூற நான் அச்­சப்­ப­ட­வில்லை. 500 மில்­லி­யனை எனக்கு பெற்­றுக்­கொள்ள சொன்­னார்கள் நாட்டை விட்டு வெளி­யே­றவும் கூறி­னார்கள்.

கேள்வி:- யார் கூறி­யது?
பதில் :- ஆமியில் சாலே  சாலேவை அனுப்பி என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். 500 மில்­லியன் ரூபாவை பெற்­றுக்­கொள்­ளுங்கள், நாட்­டினை விட்டு வெளி­யே­றுங்கள், அவ்­வாறு இல்­லாது அர­சியல் செய்­வது என்றால் இவற்றில் 300 மில்­லி­யனை வைத்­துக்­கொண்டு 200 மில்­லி­யனை தேர்­த­லுக்கு செல­வ­ழி­யுங்கள் என்றார். இப்­ப­டித்தான் எமக்கு பேரம் பேசப்­பட்­டது. நான் இதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

கேள்வி:- இது குறித்து முறைப்­பாடு செய்­ய­வில்­லையா?
பதில்:- யாரிடம் சென்று முறை­யிட முடியும், அந்த அர­சாங்கம் இருந்த காலத்தில் முறை­யிட முடி­யுமா? வெள்ளை வேன் வரும்.

கேள்வி:- நீங்கள் இந்த பணத்தை பெற்­றுக்­கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கூறி­னார்கள்?
பதில்:- ஒன்றும் செய்­ய­வேண்டாம் என்று கூறி­னார்கள். அவர்­களின் குற்­றங்­களை வெளிப்­ப­டுத்­தாது இருக்­கவே என்னை அமை­தி­யாக இருக்க கூறினர்.

கேள்வி:- உங்­களின் வெளிப்­ப­டுத்­தலை மூடி மறைக்­கவே இந்தப் பேரம்­பே­சலா?
பதில்:- ஆம் அதற்­கா­கத்தான். நான் ஒவ்­வொரு நாளும் ஊடக சந்­திப்பை நடத்தி உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தினேன். எனது தாயார் இறந்து மூன்று நாட்­களில் என்னை கைது செய்­தனர். எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு கூட என்னை பார்க்க அனு­ம­திக்­க­வில்லை. நான் என்ன குற்றம் செய்தேன், ஐக்­கி­ய­மாக இருக்க வேண்டும் என்ற கார­ணத்­தி­னாலா? என்­மீது ஏதா­வது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளதா? ஒன்றும் இல்லை.

கேள்வி:- எத்­தனை நாட்கள் சிறையில் இருந்­தீர்கள்?
பதில்:- எட்டு நாட்கள்

கேள்வி:- இது குறித்து நீதி­மன்ற வழக்கு தொடர்ந்­தீர்­களா?
பதில்:- ஹஹா, நான் நீதி­மன்றம் சென்றால் எனது வழக்கை எடுத்­து­கொள்­ளவே இல்­லையே. என்னைக் கைது­செய்து நீதி­மன்­றத்தில் கூட ஒப்­ப­டைக்­க­வில்லை. இன்­று­வரை வழக்கு இல்லை. அப்­போது அவ்­வாறு தான் நடந்­து­கொண்­டனர்.

கேள்வி:- எஸ்.எல்.ரி.ஜே ஆத­ர­வா­ளர்கள் எத்­தனை பேர் இருப்­பார்கள்?
பதில்:- இலங்­கையில் மொத்­த­மாக ஒரு இலட்­சத்­துக்கும் குறை­வான உறுப்­பி­னர்கள் இருப்­பார்கள்.

கேள்வி:- இலங்­கையில் சுமார் 20 இலட்சம் முஸ்­லிம்கள் உள்­ளனர். அவர்­களில் ஒரு இலட்சம் பேர் மாற்று கொள்கை என்றால் ஏனை­ய­வர்கள் எதுவும் செய்­ய­வில்­லையா?
பதில்:- நாம் முறை­யிட்டால் எம்மைத் தானே சிறையில் அடைத்­தனர். அவர்­களை ஒன்றும் செய்­ய­வில்­லையே. மாவ­னல்­லையில் ஏழு பேர் மட்டும் ஜும்மா நடத்­து­வ­தாக கூறி­ய­போது முறையிட்ட ஒரு அப்­பாவி பெண்ணை அல்­லவா சிறையில் அடைத்­தனர். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் கூறினார், இன்று மட்டும் அல்ல அடுத்த வாரமும் இவர்­க­ளுக்கு நாம் பாது­காப்பு கொடுப்போம் என்றார்.

மட்­டக்­க­ளப்பில் இருந்து பொலிஸ்மா அதிபர் வலி­யு­றுத்­தியும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் முடி­யாது என வலி­யு­றுத்­தினார்.அந்­த­ளவு நெருக்­க­மாக பொலி­ஸாரும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்­புடன் நெருக்­க­மாகச் செயற்­பட்­டன.

கேள்வி:- இவ்­வாறு நீங்கள் செயற்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக உங்­க­ளுக்கு எதி­ராக எந்த அழுத்­தமும் வர­வில்­லையா?
பதில்:- என்னைத் தானே அதி­க­மாக விமர்­சித்­தனர். அது­மட்டும் அல்ல நான் கூறு­வதை சற்று செவி­ம­டுங்கள். ஸஹ்ரான் அடிப்­ப­டை­வாதம் பர­விய காலத்தில் பலர் அவ­ருடன் இருந்து வில­கி­யுள்ளனர். ஆனால் இப்­ராஹிம் ஹாஜி­யாரின் மகன் தற்­கொலை தாரி­யாக மாறினார் அல்­லவா.

அவர் ஸஹ்­ரா­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திய காலத்தில் அவ­ரது அண்ணன் இவர் குறித்து கண்­கா­ணித்து வந்­துள்ளார். வீட்டில் சண்­டையும் ஏற்­பட்­டுள்­ளது. அதனை அடுத்து தம்பி அண்­ண­னுக்கு கூறு­கின்றார் ” அண்ணா உங்­க­ளுக்கு ஸஹ்­ரானை பற்றி தெரி­யாது, வந்து ஒரு­முறை பேசுங்கள்” என்று கூறி அண்­ணனை அழைத்து செல்­கின்றார். போய் சந்­தித்து வரும்­போது அண்­ணனும் பயங்­க­ர­வாதி ஆகி­விட்டார் தானே.

அந்­த­ள­வுக்கு மூளைச் சலவை செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை தான் நான் கூற முயற்­சிக்­கின்றேன். இதற்­காக இவர்கள் கூறும் நியாயம் என்ன? தொடர்ச்­சி­யாக முஸ்லிம் மக்கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றனர், இதனை தடுக்க யாரும் இல்லை. அதனால் தான் நாம் இவ்­வாறு செய்­கின்றோம் என்­கின்­றனர்.

இன்றும் அதுதான் நடக்­கின்­றது. முஸ்லிம் மக்­களை பயங்­க­ர­வா­தி­யாக்­கு­கின்­றனர். ஒரு துளி­ய­ளவு தொடர்பில் உள்ள முஸ்லிம் நபரை விடு­தலை செய்ய நாம் ஒரு­போதும் கூற­வில்லை. அவர்­களை கொன்று போட்டால் கூட எமக்கு பிரச்­சினை இல்லை. ஆனால் இன்று மக்கள் படும் வேத­னையை பார்த்து எம்மால் இருக்க முடி­ய­வில்லை. முஸ்லிம் மக்­களை இவ்­வா­றான ஒரு நிலை­மைக்கு மாற்­று­வீர்கள் என நாம் யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.

கேள்வி:- நீங்கள் என்றால் யாரை கூறுகி­றீர்கள்?
பதில்:- அர­சாங்கம், அர­சாங்­கமே இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும். ஒரு நிமிடம் நான் சொல்­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்டும், இந்த பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நாமே குரல் கொடுத்தோம். அர­சாங்கம் அல்ல, பொலிசார் அல்ல, நாம் தான் துப்புக் கொடுத்தோம். இறு­தி­யாக எம்­மையே பயங்­க­ர­வாதி என்று கூறு­கி­றீர்கள்.

70 வயது முஸ்லிம் நபர் ஒருவர் பய­ணிக்கும் போது அவரை சோதனை செய்­கின்­றீர்கள், பையில் இரு தமிழ் நாளிதழ் இருந்­தது. அதில் ஸஹ்­ரானின் புகைப்­படம் இருந்­த­தற்­காக அவரை கைது செய்­தீர்கள். பாவம் அவர்.

சரத் பொன்­சேகா :- நியா­ய­மான விடயம் தானே, கைதுசெய்து விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருக்­கு­மாக இருக்கும்,
சாலி:- விசா­ரணை நடத்­து­வதா, அப்­ப­டி­யென்றால் முதலில் பத்­தி­ரிகை நிறு­வ­னத்தை மூட வேண்டும். ஏன் அவரைக் கைது செய்ய வேண்டும். நாட்டில் வெளி­வரும் பத்­தி­ரி­கையில் தானே அது உள்­ளது. தொலைக்­காட்சி நிறு­வ­னங்கள் அனைத்­திலும் ஸஹ்ரான் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்யும் புகைப்­ப­டத்தை ஸஹ்­ரானே அனுப்பி வைத்தார்.

எவ்­வாறு அவை வந்­தது? சமூக தளங்­களில் தானே வந்­தது, உங்கள் அனை­வ­ரது தொலை­பே­சி­க­ளிலும் இது இருக்கும். அனை­வரும் அதனை ஷெயார் செய்­தனர். கொள்­ளுப்­பிட்டி லகி பிளாசா கட்­ட­டத்தில் தான் அவர் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்தார். மக்கள் தான் இவற்றை ஊட­கங்­க­ளுக்கு கொடுத்­தனர்.

இன்று சிறையில் உள்ள பிள்­ளை­களைப் பாருங்கள், தொலை­பே­சி­களில் ஸஹ்­ரானின் காணொளி இருந்த கார­ணத்­தினால் சிறையில் அடைத்து வைத்­துள்­ளீர்கள். நோன்பு காலத்தில் இந்த பாவத்தை செய்­துள்­ளீர்கள். இந்த சாபம் யாருக்கு வரும். பயங்­க­ர­வாதி ஒரு­வனும் எமக்கு வேண்டாம் ஆனால் அப்­பா­விகள் ஏன் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர்.

அது­மட்டும் அல்ல, மல்­வா­னையில் நோன்பு காலத்தில் பள்­ளி­வாசல் மூடப்­படும். அங்கு சென்று கற்­பிக்கும் மூன்று இளை­ஞர்­களை விசா­ர­ணைக்கு அழைத்து தொடர்ச்­சி­யாக மூன்று நாட்கள் விசா­ர­ணை செய்து மூன்றாம் நாள் கைது செய்து கையை கட்டி நின்­ற­வாறே 15 நாட்கள் வைக்­கப்­பட்­டனர்.

அப்­படி நடத்­தினால் இவர்கள் பயங்­க­ர­வா­தி­யாக மாறு­வார்­களா இல்­லையா?ஏன் குர்ஆன் வீசப்­பட்­டது. ஏன் மிதிக்­கப்­பட்­டது. ஏன் குர்ஆன் அவ­ம­திக்­கப்­பட்­டது.

கேள்வி:- நீங்கள் கூறு­வதை பார்த்தால் எவ­ரையும் கைது­செய்ய முடி­யாதே?
பதில் :- பொய் கூறிக்­கொண்டு எம்மை அடக்­க­வேண்டாம்.

கேள்வி:- நீங்கள் இலங்கை கொள்­கையை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?
பதில்:- ஆம், நிச்­ச­ய­மாக

கேள்வி:- “இலங்­கையில் சிறு­பான்மை என்­றாலும் உல­கத்தில் பெரும்­பான்மை இனம் நாங்கள், ஆகவே யாருக்கும் நாம் கட்­டுப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை” இவ்­வா­றான கருத்­துக்­க­ளுக்கு நீங்கள் ஆத­ரவா?
பதில்:- யார் இவ்­வாறு கூறி­யது?

கேள்வி:- ஹிஸ்­புல்லாஹ்…
பதில்:- இதனை நான் அப்­போதே மறுத்தேன். இந்த நேரத்தில் இவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைப்­பது தவறு. அவ­ருக்கும் கோபம், முரண்­பா­டுகள் இருக்கும் தானே, அவர் கஷ்­டப்­பட்டு வெளி­நாடு சென்று நிதி­களை திரட்டி இங்கு பல்­க­லைக்­க­ழகம் அமைத்து இறு­தியில் அதனை மூட வேண்டும் என தேரர்கள் கூறி­வ­ரு­கின்ற நிலையில் அவ­ருக்கும் கோபம் வரும் தானே.

இப்­போது பாருங்கள் மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் ஷரிஆ பல்­க­லைக்­க­ழகம் என கூறு­கின்­றனர். அது அவ்­வாறு அல்ல. ஒரு பாட­மாக ஷரிஆ உள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் இதனை உயர்­கல்வி அமைச்சு தானே கண்­கா­ணிக்க வேண்டும். அது­மட்­டுமா ரதன தேரர் ஏன் உண்­ணா­வி­ரதம் இருந்தார்? தலதா மாளிகை முன்­னி­லையில் ஏன் அவ்­வாறு உண்­ணா­வி­ரதம் இருந்தார்.

இது பெளத்த சிங்­கள மக்­களை தூண்­டி­விடும் செயற்­பாடு. பாருங்கள் அவர் உண்­ணா­வி­ர­தத்தை முடித்­து­விட்டு வைத்­தி­ய­சாலை சென்று பின்னர் அவர் தேரர்­க­ளுடன் கூறிய கருத்­துக்கள் ” யு.என்.பியையும் சீர­ழித்து விட்டேன், ஸ்ரீலங்­கா­வையும் சீர­ழித்து விட்டேன், இப்­போது ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரானால் சரி’ என கூறு­கின்றார்.

அந்த காணொளி என்­னிடம் உள்­ளது. பிரச்­சி­னையை உரு­வாக்­கி­விட்டு இவர்கள் எதிர்­பார்ப்­பது என்ன. தாக்­கு­தல்­களின் பின்னர் இடம்­பெற்ற கல­வ­ரங்­களில் எல்லாம் தாமரை கட்­சியின் பிர­தான நபர்கள் உள்­ளனர். அவர்­களை ஏன் இன்­று­வரை கைது­செய்­ய­வில்லை.

முஸ்லிம் மக்­களை சந்­தே­கத்தில் கைது செய்­கின்­றீர்கள், பள்­ளி­வா­சல்கள் பல தட­வை­கைகள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. நாய்­களை கொண்­டு­வர வேண்டாம் என நான் கூற­வில்லை. முடிந்தால் கால­ணியைக் கழற்­றி­விட்டு செல்­லுங்கள். முடி­ய­வில்லை என்றால் பர­வா­யில்லை. நாய்­களை கொண்­டு­வ­ரு­வது என்றால் முதலில் எங்­க­ளிடம் கூறி­வி­டுங்கள். நாங்கள் சரி­யான சூழல் ஒன்றை உரு­வாக்கிக் கொடுக்­கின்றோம்.

ஏனெனில் எமக்கும் நாய்க்கும் ஒத்­து­வ­ராது. மத ரீதியில் இது சரி­யில்லை. அதற்கும் எம்மை விமர்­சிக்­கி­றீர்கள். குர்­பா­னுக்­காக கொண்­டு­வந்த கத்­தி­ க­ளையும் வீட்டில் உள்ள மீன் வெட்டும் கத்­தியை சிறிய கத்­தியை வைத்­துக்­கொண்டு எம்மை விமர்­சிக்­கி­நீர்கள். இன்று வீடு­களில் உள்ள எமது பெண்கள் பாண் ஒன்றை வெட்­டக்­கூட கடைக்கு சென்று கொடுக்­கின்­ற­னராம். வீட்டில் கத்தி இல்­லையாம். எமக்கு ஒரு பெயர் உள்­ளது ‘ மா ரக லே” அப்­ப­டிப்­பட்ட எம்மை ஏன் இவ்­வாறு நடத்­து­கின்­றீர்கள்.

சரத் பொன்­சேகா:- அசாத் சாலி அவர்­களே, அப்­போ­தைய சூழல் மிகவும் பயங்­க­ர­மான சூழல். அந்த நேரத்தில் இரா­ணுவம் அவ்­வாறு தான் நடந்­து­கொள்ளும். அவர்­க­ளுக்கு நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றால் சுதந்­திரம் வழங்­கப்­பட வேண்டும். அவர்­களை குறை­கூற முடி­யாது. உங்­க­ளுக்கு ஏற்ற வகையில் நடந்­து­கொள்ள முடி­யாது. இந்த சூழலை உரு­வாக்­கிய நபர்கள் இரா­ணு­வத்தை விரல் நீட்ட வேண்டாம். இதனை உரு­வாக்­கிய நபர்கள் தான் பொறுப்­புக்­கூற வேண்டும். நினைவில் வைத்­துக்­கொள்­ளுங்கள்.

சாலி:- இதில் மக்கள் இரா­ணு­வத்­திடம் எதிர்­பார்ப்­பது நேர்­மை­யான செயற்­பாட்டை. தேடுதல் நடத்த முடியும். குர்­ஆனை வீசக்­கூ­டாது, காலால் மிதிக்­கக்­கூ­டாது, வீட்டின் பொருட்­களை இழுத்­தெ­றியக் கூடாது. இவற்றை எல்லாம் செய்ய ஒரு வழி­முறை உள்­ளது. அத­னைத்தான் கையாள வேண்டும்.

சரத் பொன்­சேகா:– சாலி, இந்த கார­ணிகள் ஒரு சம்­பவம் தானே. இது நடந்­ததா இல்­லையா என எமக்கு தெரி­யாது. ஒருவர் இருவர் கூறி­ய­தற்­காக முழு இரா­ணு­வத்­தையும் குறை சொல்ல வேண்டாம். இரா­ணுவம் என்­பது பொலிஸ் மாதிரி அமை­தி­யாக இருக்­காது. இரா­ணுவம் சென்றால் மக்­க­ளுக்கு நெருக்­கடி வரும். அது தான் வழமை. அவர்கள் கெஞ்சி கொஞ்சி தேட மாட்­டார்கள். உங்­களின் கடமை இரா­ணு­வத்­துக்கு இட­ம­ளிப்­பது. அதனை விளங்­கிக்­கொள்ள வேண்டாம்.

சாலி:- நான் அவ்­வாறு கூற­வில்லை. எட்டுப் பேர் கொண்ட ஒரு சிறிய குழு செய்த தவ­றுக்­காக ஏன் ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் அந்த பக்­கமே தள்­ளி­விட பார்க்­கி­றீர்கள் என்றே நான் கேட்­கிறேன்?

சரத் பொன்­சேகா:- எட்­டுப்பேர் செய்­த­தாக இருந்­தாலும் 250 பேர் இறந்­தார்கள் தானே. 500 பேருக்கு காயம் ஏற்­பட்­டதே. எட்­டுபேர் செய்த வேலை­தானே இது.

சாலி :- எல்.ரி.ரி.இ காலத்தில் கிழக்கில் முஸ்­லிம்கள் புலி­க­ளுடன் இருக்­க­வில்­லையே, ஏன்? நாங்கள் நாட்­டுக்­காக இரா­ணு­வத்­துடன் இருந்தோம்.

தெரி­வுக்­குழு:- சரி சரி இப்­போது கேள்­விக்கு வருவோம், உரிய காரணி என்­னவோ அதனை பேசுவோம். சாட்­சி­யங்கள் இருப்பின் அவற்றை காட்­டுங்கள். இந்த சாட்­சி­களில் ஹிஸ்­புல்­லாஹ்­வுடன் ஸஹ்ரான் உள்ள புகைப்­ப­டங்கள் உள்­ள­னவே?

பதில்:- கிழக்கு தேர்­தலில் போட்­டி­யிட்ட கட்­சி­க­ளுடன் ஸஹ்ரான் உடன்­ப­டிக்கை ஒன்றை செய்­து­கொண்டார். அதற்­க­மைய சகல கட்­சி­களும் அவ­ருடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டன. அமீர் அலியும் அழைக்­கப்­பட்டார். அப்­போது அமீர் அலி கூறி­யது என்­ன­வென்றால், நீங்கள் எவ்­வாறு அனை­வ­ரு­டனும் செயற்­பட முடியும். அப்­ப­டி­யென்றால் ஒன்று செய்­யுங்கள் எனது அர­சியல் மேடையில் ஏறி எனக்கு வாக்­க­ளிக்க கூறுங்கள் நான் உங்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்­கின்றேன் என்றார்.

அதன் பின்னர் ஸஹ்ரான் ஹிஸ்­புல்­லா­ஹ்வுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்டார். ஸஹ்­ரா­னுக்கு மக்கள் ஆத­ரவு இல்லை, ஆனால் இவர் காத்­தான்­கு­டியை நிரு­வ­கிக்கும் முறைமையால் மக்கள் அச்­சத்தில் இருந்­தனர். அதனால் தான் இவர்­களும் அஞ்சி உடன்­ப­டிக்கை செய்­தனர்

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!