ஷிக்கர் தவானின் விரலில் எலும்பு முறிவு; அவரது உலகக்கிண்ணப் பயணம் முடிவுக்கு வரலாம்?

0 46

அவுஸ்திரேலியாவுக்கு எதி­ரான உலகக் கிண்ண லீக் போட்­டி­யின்­போது காயத்­துக்கு மத்­தி­யிலும் துடுப்­பெ­டுத்­தாடி அபார சதம் குவித்த ஷிக்கர் தவானின் உலகக் கிண்ணப் பயணம் முடி­வுக்கு வரலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது. இது இந்­திய கிரிக்கெட் அணிக்கு பேரி­டியைக் கொடுத்­துள்­ளது.

நேதன் கூல்டர் நைலினால் வீசப்­பட்ட பந்து எகிறிப் பாய்ந்­த­போது தவானின் இடது கட்­டை­வி­ரலில் பலத்த அடி பட்டு காயம் ஏற்­பட்­டது.

ஆனால் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தாடி 109 பந்­து­களில் 119 ஓட்­டங்­களைப் பெற்று இந்­தி­யாவின் வெற்­றிக்­கான சிறந்த ஆரம்­பத்தை இட்­டுக்­கொ­டுத்­தி­ருந்தார். ஆனால் கட்டை விரலில் ஏற்­பட்ட காயம் குண­ம­டை­வ­தற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் செல்­லலாம் என அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இந்­தியா துடுப்­பெ­டுத்­தாடி முடிந்த பின்னர் அவுஸ்­தி­ரே­லியா பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது ஷிக்கர் தவான் களத்­த­டுப்பில் ஈடு­ப­டவே இல்லை. அவ­ருக்குப் பதி­லாக ரவீந்த்ர ஜடேஜா களத் தடுப்பில் ஈடுபட்டார்.

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நொட்­டிங்­ஹம்­ஷ­யரில் நாளை நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­காக சென்­றுள்ள இந்­திய அணி­யுடன், எலும்பு முறி­வுக்­குள்­ளான ஷிக்கர் தவான் செல்­ல­வில்லை என அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் அவ­ரது காயம் பார­தூ­மா­னது என்பதால் அவரது இடத்தை பெரும்பாலும் ரஷாப் பான்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!