அலுகோசு பதவிக்கு 26 பேர் தெரிவு

0 600

(ரெ.கிறிஷ்­ணகாந்)

(மரண தண்­டனை நிறை­வேற்­று­பவர்) பத­விக்­கான அடிப்­படை தகு­தி­களை பூர்த்தி செய்­துள்ள 26 பேர் நேர்­முக தேர்வின் மூலம் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த 26 பேருக்கும் நேற்றும் இன்றும் விசேட செய­ல­மர்­வொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது தெரிவு செய்­யப்­பட்­டுள்ள 26 பேருக்கும் விசேட பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன், குறித்த பயிற்­சிகள் வெலிக்­கடை சிறைச்­சா­லையின் பயிற்சி நிலை­யத்தில் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ள சிறைச்­சா­லைகள் திணைக்­களம், பயிற்­சியின் நிறைவில் அலு­கோசு பத­விக்­காக இரு­வரை தெரி­வு­செய்­ய­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்..

இந்த செய­ல­மர்வில் அரச சேவை, பத­வியின் தன்மை, குறித்த பதவி தொடர்பில் சமூ­கத்தின் பார்வை, இந்த பத­வி­யினால் ஏற்­படும் அழுத்­தங்கள் தொடர்பில் தெளி­வூட்­டப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அலு­கோசு பத­விக்­காக இரு பெண்கள் உட்­பட 102 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.அத்­துடன், அமெ­ரிக்க பிர­ஜை­யொ­ரு­வரும் விண்­ணப்­பித்­தி­ருந்தார். எனினும், ஆரம்­ப­சுற்றில் அமெ­ரிக்க பிர­ஜை­யி­னதும், பெண்கள் இரு­வ­ரி­னதும் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

இலங்­கையைச் சேர்ந்த ஆண்கள் மாத்­திரம் இந்த பத­விக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வதால் இந்த விண்­ணப்­பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய 79 பேரில் 26 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!