வேகமாக தமிழ் கற்கும் நடிகை அமைரா

0 242

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமைரா தஸ்துர். அவர், தமிழில் அனேகன் படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின், நடிகர் சந்தானத்துடன் ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகிறார்.

அதே நேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதுப் படம் ஒன்றில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நடிகை அமைரா தஸ்துர் வேகமாக தமிழ் கற்று வருகிறார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்கும் படம் த்ரில்லர் படம். இந்த படத்தில், நான் நடிக்கும் கேரக்டர் மிகவும் வலிமையானது. அந்தப் படத்தின் டப்பிங்கின் போது, அதில் நானே பேசினாதான் அந்த கேரக்டரின் வலிமை உயிரோட்டமாக ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அதோடு, பேசும் வசனத்தை நான் புரிந்து பேச வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக, முழுவேகத்தில் தமிழ் கற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன். எல்லா படங்களிலும் நானே, டப்பிங் பேசுவேன்.

இவ்வாறு அமைரா தஸ்துர் கூறியிருக்கிறார். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!